ஹைபோடென்ஷனால் அவதிப்பட்ட ரத்தன் டாடா.. உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் இந்த நோயின் அறிகுறிகள் என்ன?
கடந்த சில நாட்களாக ரத்தன் டாடாவுக்கு உடல்நிலை சரியில்லை. மும்பையில் உள்ள பிரபல ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
ரத்தன் டாடா குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாருக் ஆஸ்பி கோல்வாலாவின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் ரத்தன் டாடாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வயதைக் கொண்டு எழும் பிரச்சனைகள் நிலைமையை இன்னும் கடினமாக்குகின்றன. டாக்டர் ஷாருக் ஆஸ்பி கோல்வாலாவின் கூற்றுப்படி, ரத்தன் டாடா குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக ஹைபோடென்ஷனால் அவதிப்பட்டார். இதனால் அவரது உடலின் பல உறுப்புகள் படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிட்டன. நீரழிவு பிரச்சனையும் அவருக்கு வர ஆரம்பித்தது. வயதானவர்களுக்கு இது ஒரு கடுமையான பிரச்சினையாக மாறும் என தெரிவித்தார்.
குறைந்த இரத்த அழுத்தம் எவ்வளவு ஆபத்தானது?
உங்கள் இரத்த அழுத்தம் 90/60 க்கு குறைவாக இருந்தால், மருத்துவர்கள் அதை குறைந்த இரத்த அழுத்தம் என்று கருதுகின்றனர். வயது அதிகரிக்கும் போது, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டின் ஆபத்தும் அதிகரிக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, வயதானவர்களுக்கு இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது. இரத்த அழுத்தம் திடீரென குறையும் போது, மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளை குறையத் தொடங்குகிறது.
அத்தகைய சூழ்நிலையில், தலைவலி, மயக்கம், தலைசுற்றல், குமட்டல், பார்வை மங்கல், சுவாசிப்பதில் சிரமம், அதிக இதயத்துடிப்பு, நீரிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவரை அணுகி உகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை :குறைந்த இரத்த அழுத்தத்தை தவிர்க்க, கட்டாயமாக வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்
தினமும் சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, உப்பு அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் சரியான அளவு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்
ஆல்கஹால் மற்றும் காஃபின் பானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்
உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்
இறுதியாக, ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாக உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு : இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே. உங்கள் உடல் நலம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)
No comments:
Post a Comment