Thursday, July 20, 2023
Friday, July 14, 2023
Thursday, July 13, 2023
“நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி!”
“நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி!”
பிரீமியம் ஸ்டோரிNews
வெ.இறையன்பு
எந்தப் பணியையும் கோப்புகளில் பார்ப்பதற்கும் களத்தில் சரிபார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. பரிசோதனைக்கூடத்தில் இருந்து வயல்வெளிக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இடைவெளியை உணர்ந்து சரி செய்வதே நிர்வாகப் பணி
”முப்பந்தைந்து ஆண்டுக்கால குடிமைப் பணியிலிருந்து, தமிழக மக்களின் அன்பில் நனைந்து ஓய்வுபெற்றிருக்கிறார் வெ.இறையன்பு. அபாரமான உழைப்பு, தீர்க்கமான திட்டமிடல், உறுதியான ஒருங்கிணைப்பு என, பணியாற்றிய எல்லாத் துறைகளிலும் நல்லடையாளம் பதித்தவர். கடந்த இரண்டாண்டுக் கால தலைமைச் செயலர் பணி பல சவால்களை அவர்முன் வைக்க, அனைத்தையும் திறம்படக் கடந்தார். ஓய்வுக்குப் பிறகும் சந்திப்புகள், பயணங்கள் என்று பரபரப்பாக இருந்தவரிடம் உரையாடினேன். பணிக்கால அனுபவங்கள், எதிர்காலத் திட்டங்கள் என மனம்திறந்து பேசினார்.
‘‘ஓய்வு பெறும் நிகழ்ச்சி முடிந்ததும் அப்பாவைப் பார்க்க சேலம் பறந்துவிட்டீர்கள். என்ன சொன்னார் அப்பா?’’
‘‘ ‘ஓய்வு பெற்றாலும் ஓய்ந்திருக்காதே’ என்றார்.’’
‘‘முப்பத்தைந்து ஆண்டுக்கால நிர்வாகப் பணி மனத்துக்கு நிறைவாக இருந்ததா? நினைத்த அனைத்தையும் செய்ய முடிந்ததா?’’
‘‘நிர்வாகம் என்பது தனி மனித முயற்சி அல்ல. அது கூட்டுப் பொறுப்பு. நினைத்த அனைத்தையும் செய்வது யாருக்கும் சாத்தியமல்ல. ஆனால் நிர்வாகப் பணியின் மூலம் விரும்பத்தக்க மாற்றங்களை ஓரளவேனும் விளைவிக்க முடியும். அவை நம் கண் முன்னாலேயே பூத்துக் குலுங்குவதையும் பார்க்க முடியும். அந்தத் திருப்தி, மழை நாளில் பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீராய் உள்ளத்தில் ஈரமாய் இருக்கிறது.’’
‘‘பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நீங்கள். ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை. எதிர்பார்த்த சுதந்திரத்தோடு இயங்க முடிந்ததா?’’
‘‘ ‘மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்படுகிறான்’ என்று ரூசோ குறிப்பிடுகிறார். பிறக்கும்போதுகூட மனிதன் சுதந்திரமாக இல்லை என்பதே உண்மை. அவனுக்குத் தாயின் கதகதப்பும், தந்தையின் அரவணைப்பும் தேவைப்படுகிறது. சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல, ஒப்பீடு கொண்டது. இந்தப் பொறுப்பில் பல நிகழ்வுகளில் கட்டமைக்கப்பட்ட சுதந்திரத்தோடு நான் செயல்பட்டேன்.’’
‘‘இந்த இரண்டாண்டு பணிக் காலத்தில் மிகவும் கடினமான முடிவு என்று ஏதாவது எடுக்க நேர்ந்ததா?’’
‘‘முக்கியமான பதவி என்பதே பல கடினமான முடிவுகளை எடுக்கத்தான். தொடக்கத்தில் எளிது போலத் தோன்றும் பல நிகழ்வுகள், சரியான அக்கறை செலுத்தாவிட்டால் கடினமான முடிவை எடுக்கும் நெருக்கடியை நிகழ்த்திவிடும். நிர்வாகத்தில் அத்தனை கோப்புகளுமே முக்கியமானவைதான்.’’
‘‘பல நேரங்களில் நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறீர்கள். நிர்வாக மட்டத்தில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள். மிகவும் நிறைவளித்த பணி என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?’’
‘‘எந்தப் பணியையும் கோப்புகளில் பார்ப்பதற்கும் களத்தில் சரிபார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. பரிசோதனைக்கூடத்தில் இருந்து வயல்வெளிக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இடைவெளியை உணர்ந்து சரி செய்வதே நிர்வாகப் பணி. பல மாற்றங்கள் நடந்திருப்பதாக நீங்களே ஒப்புக்கொள்வது அதற்குச் சான்று. ஆனால் அவை தனிப்பட்ட சாதனைகள் அல்ல, ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் துரிதமான செயல்பாடு. நான் மிகவும் பெரிதாக எண்ணுவது, புதிய சாலைகளைப் போடும்போது, பழைய சாலைகளைச் சுரண்டிவிட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுதான். களத்தில் ஆய்வு செய்து அவ்வாறு போடப்படாத சாலைகளைப் பெயர்த்தெடுத்து மீண்டும் போடச் செய்தோம். இப்போது அது பெரும்பாலான நேர்வுகளில் பிறழாமல் பின்பற்றப்படுகிறது.’’
வெ.இறையன்பு
‘‘நிறைய எழுதுபவர் நீங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதேனும் எழுதினீர்களா?’’
‘‘ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் மாவட்ட ஆட்சியர்களுக்குக் கைப்பட நிறைய கடிதங்கள் எழுதினேன்.’’
‘‘தலைமைத் தகவல் ஆணையர் ஆவீர்கள் என்ற பேச்சு இருந்தது. டி.என்.பி.எஸ்.சி-க்குத் தலைவர் ஆவீர்கள் என்றார்கள். எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வதாகத் திட்டம்?’’
‘‘இளைஞர்களோடும் மாணவர்களோடும் இணைந்து பயணிப்பதே திட்டம்.’’
‘‘மக்களுக்கு இப்போது அதிகாரிகள் மீது அதிகம் விரக்தியும் வெறுப்பும் இருக்கின்றன. ஒரு நல்ல அதிகாரி எப்படி இருக்க வேண்டும்?’’
‘‘ ‘அதிகாரி வீட்டுக் கோழி முட்டை, குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும்’ என்பது பழமொழி. எனவே வெறுப்பு எப்போதும் இருக்கிறது. ஒரு நல்ல அதிகாரி கண்களில் கனிவுடனும், காதுகளில் கடன் கொடுக்கும் கருணையுடனும், இதயத்தில் ஈரத்துடனும், உதடுகளில் இனிப்புடனும், உள்ளத்தில் உற்சாகத்துடனும், கைகளில் சுத்தத்துடனும், கால்களில் சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.’’
‘‘தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். கனவுடன் இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் திட்டம் இருக்கிறதா?’’
‘‘தேடி வருகிறவர்களுக்கு வழிகாட்ட சுட்டு விரலாகவும், இணைந்து பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் பற்றிக்கொள்ளச் சுண்டு விரலாகவும் எப்போதும் இருப்பேன்.’’
‘‘பணி ஓய்வு பெறும் முன், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவுறுத்தியிருந்தீர்கள். பெரியவர்கள் மத்தியிலும்கூட வாசிப்புப் பழக்கம் குறைந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?’’
‘‘சைமன் சினக் என்கிற அறிஞர் கூறுவதுபோல, இன்றைய தலைமுறை கவனச்சிதறல் தலைமுறை. ஐந்து நிமிடங்கள் ஒன்றை ஆழ வாசிக்கிற திறனை அவர்கள் மின்னணுச் சாதனங்களால் இழந்து விட்டார்கள். நெறிப்படுத்தப்பட்ட வாசிப்பு அவர்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்தி மேலும் தேட ஊக்குவிக்கும். அதற்கான சின்ன முயற்சியே, காரிருளில் ஏற்றப்படுகிற இந்தச் சிறிய அகல் விளக்கு.’’
‘‘பொதுவாக நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் அணுக முடியாத உயரத்தில் இருப்பார்கள். தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும் எளிமையாக இருந்தீர்கள். இதில் யார் உங்களுக்கு முன்மாதிரி?’’
‘‘இன்னும் உயர்ந்த பதவிகளில் உட்கார்ந்திருந்த எத்தனையோ மாமனிதர்கள் வழிந்தோடும் எளிமையுடனும், கடற்பஞ்சு போன்ற மென்மையுடனும் இருப்பதை தரிசித்திருக்கிறேன். சாதனை புரிந்தவர்கள் சத்தமில்லாமல் நடமாடுவதைக் கண்டு வியந்திருக்கிறேன். அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் முத்துக்கல்லைவிட அன்றாடம் பயன்படுத்தும் உப்புக்கல்லுக்கே அதிக மகத்துவம் என்பது எளிமையைப் புரிய வைக்கும் உண்மை. நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி. எந்த நிலையிலும் மாறாமல் இருப்பதே மனிதனாக வாழ்வதற்கான அத்தாட்சி.’’
‘‘தண்டோரா தொடங்கி தலித் ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்ற முடியாத நிலை வரை பலவற்றையும் சீர்செய்தீர்கள். சமூகத்தின் சாதியப் படிநிலை ஒழிய இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்?’’
‘‘மாணவர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் சமுதாய மடைமாற்றம் ஏற்படும். அதை நோக்கி நாம் உழைக்க வேண்டும். மாநகரங்களில் சாதி என்கிற கறை கரைந்து வருகிறது. சிற்றூர்களில் இன்னும் அது மச்சமாக மருவுவதுதான் வேதனையாக இருக்கிறது.’’
‘‘இன்றும் தலித் தலைவர்களால் கொடியேற்ற முடியாத நிலை இருக்கிறது. அப்படியான ஆதனூருக்கு நீங்கள் நேரில் சென்றீர்கள். தடுத்த மக்கள் உங்களை எப்படி எதிர்கொண்டார்கள்?’’
‘‘நிர்வாகம் தோள் கொடுக்கிறது என்றால் பாகுபாடுகள் அப்போதைக்கு அடங்கிப்போவது இயல்பு. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு பாப்பாபட்டி, கீரிப்பட்டி. ஆதனூரிலும் அமைதியாகவே வரவேற்றார்கள், அன்பாகவே உபசரித்தார்கள்.’’
வெ.இறையன்பு
‘‘இதுமாதிரியான புரையோடிப்போன சமூக அநீதிகளை அதிகாரத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது வேறென்ன மாற்றம் நிகழ வேண்டும்?’’
‘‘அதிகாரம் கொண்டு எதையும் முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் அதை அழிக்க அதிகாரம் பக்கபலமாக இருக்க வேண்டும்; ஒரு பக்கம் சாய்ந்துவிடக் கூடாது.’’
``தலைமைச் செயலராக இருந்தபோது வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் கோரிக்கைகளைக்கூட கவனமெடுத்து நிறைவேற்றினீர்கள். எல்லாவற்றையும் எப்படி கவனித்து நடவடிக்கை எடுக்க முடிந்தது?’’
‘‘எந்தக் குறுஞ்செய்தியாக இருந்தாலும் பெறப்பட்டவுடன் தொடர்புடைய அலுவலருக்கு அனுப்பிவிடுவேன். என் இல்லத்திலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல அரை மணி நேரம் ஆகும். அப்போது அந்த அலுவலரிடம் பேசி மாலைக்குள் அறிக்கை வேண்டும் என்று அறிவுறுத்துவேன். இரவு இல்லம் திரும்பும்போது பெரும்பாலானவற்றிற்குத் தீர்வு கிடைத்திருக்கும். சில குறுஞ்செய்திகள் முதலமைச்சர் அவர்களாலேயே அன்றாடம் முன்மொழியப்படுவதுண்டு.’’
‘‘தலைமைச்செயலாளராக இருந்த காலத்தில் அதிகாரிகள் உங்களை எப்படி எதிர்கொண்டார்கள்?’’
‘‘அதிகாரிகள் எளிமையாக நடந்துகொண்டால் அலுவலர்கள் நீடித்த உழைப்பைத் தருவார்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் களத்தில் பயணித்தால் அக்கறையோடு பாடுபடுவார்கள். கண்டிப்பைவிட கனிவை அதிகம் நேசிக்கிறார்கள். ஒற்றைச் சொல்லையே உத்தரவாக எண்ணி உழைப்பவர்கள் அதிகம். கட்டளை இடுவதைவிட கைப்பிடித்து அவர்களை வழிநடத்தினால் மகிழ்ச்சியோடு கடைப்பிடிப்பார்கள். எந்த வகையிலும் ஊக்குவிக்க முடியாத ஒரு சிலர் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. அவர்களுக்குக் குரலை உயர்த்தியும், விரலை உயர்த்தியும் சொன்னால்தான் புரியும்.’’
‘‘காவல் நிலையங்களில் வீணாகக் கிடந்த வாகனங்களை ஏலம்விட வைத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் பிரச்னை எப்படி உங்கள் கவனத்துக்கு வந்தது?’’
‘‘நான் டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் பணியாற்றியபோதுதான் இதை நேரில் அனுபவித்தேன். வாகனத்தை நிறுத்தக்கூட முடியாமல் வழிமறிக்கும் பழுதுபட்ட வண்டிகள் அங்கு நிறைய. ஒவ்வொரு வளாகத்திலும் இத்தகைய அவலம் அதிகம் என்பதை அறிந்தே அத்தகைய அறிவுரை அளிக்கப்பட்டது. வாராவாரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏலம் விடப்படாத இடங்களை ஊடகங்களும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தின. இது ஒருவரின் வெற்றி அல்ல, ஒட்டுமொத்த வெற்றி.’’
‘‘செஸ் ஒலிம்பியாட் உங்கள் பணிக்காலத்தில் ஒரு சாதனை நிகழ்வு. அந்தக் காலகட்டத்தின் சவால்களை நினைவுகூர முடியுமா?’’
‘‘மற்ற இடங்களில் செஸ் ஒலிம்பியாட் நடத்த இரண்டாண்டுகள் அவகாசம் தேவைப்படும் என்கிற நிலையில் நான்கே மாதங்களில் அது நிகழ்த்தப்பட்டது தமிழ்நாடு அரசின் சாதனை. 182 நாடுகள் கலந்து கொண்டன. அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் வருகிறபோது புன்னகையுடன் வரவேற்றோம்; அவர்கள் திரும்பும்போது சிரித்த முகத்துடன் சென்றார்கள். தினந்தோறும் குழுக் கூட்டம், ஏகப்பட்ட கள ஆய்வு, குழுக்களின் ஒருங்கிணைப்பு, கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, ஆகியவையே அது வெற்றி பெற்றதற்குக் காரணங்கள். முதலமைச்சர் அவர்களின் முழுமையான ஈடுபாடே கிரியா ஊக்கியாக இருந்தது.’’
‘‘உங்களை முன்மாதிரியாகக் கருதும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’
‘‘ஒரே ஒரு அறிவுரைதான். யாருடைய அறிவுரையையும் பின்பற்றாதீர்கள். உள்மனம் உரைப்பதை உள்ளார்ந்து செய்யுங்கள்.’’
No action by NMC on paltry stipend for house surgeons at private medical colleges
No action by NMC on paltry stipend for house surgeons at private medical colleges
The issue stems from the NMC’s vague guidelines on Compulsory Rotating Internship Regulations, which grant the power to fix stipends to the college management.
Published: 13th July 2023 06:29 AM
Express News Service
THIRUVANANTHAPURAM: The failure of the National Medical Council (NMC), the governing body responsible for regulating medical education, to address the issue of extremely low stipends for MBBS interns in private medical colleges has caused considerable concern. Despite the commencement of a new batch of house surgeons in July, there has been no improvement in the stipend amounts they receive.
In response to a complaint filed by a medical student from Kozhikode, the National Human Rights Commission (NHRC) ordered the NMC to conduct a nationwide survey to investigate the disparity in stipend payments.
The NMC conducted the survey in May but has yet to provide an action-taken report, even though the NHRC requested it within eight weeks. This delay has led health activist Dr Babu K V to question the NMC’s commitment to safeguarding the interests of the students.
“The medical council / NMC had three opportunities to ensure uniform stipend for MBBS interns. First was in January 2019 when they issued notification for Compulsory Rotating Internship Regulations, later when it was gazetted in November 2023 and the last when NHRC intervened.
They acted in favour of private medical college managements on earlier two occasions and now also seems to be dragging the issue,” said Dr Babu, who has been following the issue since 2017.
The issue stems from the NMC’s vague guidelines on Compulsory Rotating Internship Regulations, which grant the power to fix stipends to the college management. This has resulted in significant disparities in stipend amounts among different colleges, leaving students at the mercy of their respective institutions.
“The disparity in stipends given at various colleges shows the arbitrariness in which they handle the issue. Most of the time the students suffer in silence. We were hoping for an early resolution of the issue after the survey,” said a representative of the Medical Students Network, the student unit of the Indian Medical Association (IMA).
NMC received over 28,000 responses due to the vigorous campaigning by MSN. However, the situation has not changed even when the new batch of MBBS students started their house surgency in July.
The stipend amounts for MBBS interns in private medical colleges vary greatly, with the respective colleges’ fee fixing authority having the final say under the Compulsory Rotating Internship Regulations, 2021. Stipends, which are essential for students during their one-year house surgency period, range from as low as Rs 1,500 (after deductions) to Rs 13,000 in most private colleges.
ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!
ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!
13.07.2023
புது தில்லி: உலகம் எத்தனை மாறினாலும், இன்னமும் ஆண் குழந்தைக்கே இந்தியர்கள் ஆசைப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகலந்த ஆராய்ச்சி முடிவு வெளியாகியிருக்கிறது.
நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் குடியரசுத் தலைவர் பதவியை பெண்கள் அடைந்த போதிலும், மக்களின் மனங்களில் மகன் தேவை என்ற அந்த ஒரு குணாதிசயம் மாறவேயில்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன. இந்திய கொள்கை முகமையில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வயதான முதியவர்களுக்கு அவர்களது மகன் பொருளாதார ரீதியாக ஆதரவு அளிப்பார் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், நாட்டில் உள்ள முதியவர்களுக்கு பொது ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறது. இதையும் படிக்க.. இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரிப்பு: நாமக்கல் ஆட்சியர் வேதனை!
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் பொது விவகாரத் துறை பேராசிரியர் சீமா ஜெயச்சந்திரன், பள்ளிகள் மூலம் பெண் குழந்தைகளுக்கு போதுமான சுகாதார அடிப்படை சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதை வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்திய குடும்பங்களில் மகள்களை விடவும், மகன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பாங்கு ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறுபட்டிருக்கிறதே தவிர மறையவில்லை என்கிறார். அதாவது, ஆண் பிள்ளைகளுக்காக செய்யப்படும் முதலீடு என்பது, அவர்களுடன் பிறந்த பெண் பிள்ளைகளிடமிருந்து வேறுபடுகிறது என்பதாகவே அது உள்ளது. ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற விருப்பம் - ஒரு குடும்பத்தில் மூத்த மகனின் முக்கியத்துவம் - போன்றவை இதுபோன்ற பாலின வேறுபாடுகளுக்கு இட்டுச்செல்கின்றன என்கிறார்.
தற்போது, சுருங்கி வரும் குடும்பங்களில், ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற விருப்பம் மகன் தேவை என்ற விருப்பத்தை அதிகரித்து, பாலின தேர்வை மையப்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது எனவும் ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில், மகன் பிறக்க வேண்டும் என்ற வேட்கை, பெற்றோருக்கு ஏற்படும்போது, அது மறைமுகமாகவும் நேரடியாகவும், அப்பெற்றோருக்கு இருக்கும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முதலில் பெண் குழந்தை பிறந்ததும், அடுத்து ஆண் குழந்தைக்காக உடனடியாக தாய் கருவுறும்போது, முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பது நிறுத்தப்படுவது முதல் தொடர்ச்சியான பல பாதிப்புகள் நேரிடுகின்றன. அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வந்து, குடும்பங்களில் மகன்களின் மீதான ஆர்வத்தைக் குறைப்பது என்பது மிகப்பெரிய சவால் என்றும் சீமா ஜெயச்சந்திரன் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
முதுமையில், மகன்தான் பெற்றோரை பாதுகாப்பான் என்ற மனப்பான்மை, வாரிசு, தலைமுறை, மகள் வீட்டில் பெற்றோர் இருப்பது அவமரியாதை போன்ற பல்வேறு சமுதாயச் சிக்கல்கள் மெல்ல உடைபட்டு வந்தாலும், பொதுவான கண்ணோட்டம் காரணமாகவே இந்தியர்கள் மகன்கள் மீது தீரா ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் மகன் காப்பாற்றுவான், மகள் திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்ற சமுதாயக் கட்டமைப்பும் ஆண் குழந்தை வேண்டும் என்று இந்தியர்கள் அதிகம் ஆசைப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு மகனின் பெற்றோர் அடையும் சலுகைகளை, மகளின் பெற்றோரும் அடையும் வகையில், கொள்கைகளை மாற்றுவது, முதியவர்களுக்கு பொதுவான ஓய்வூதியம், முதியவர்களுக்கு இலவச மருத்துவம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பது நிச்சயம் பாலின சமத்துவத்தை மக்கள் மனங்களிலும் கொண்டு வர உதவலாம் என்றே கருதப்படுகிறது.
Dailyhunt
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்
13.07.2023
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 40,199 போ விண்ணப்பித்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும்.
சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாள்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் (ஜூலை 12) நிறைவடைந்தது. இந்த நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தோவுக்குழுச் செயலா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது: நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,805 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் என மொத்தம் 40,199 போ விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்"என்றாா் அவா்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியா் பணி கற்பித்தலே
13.07.2023
முன்பெல்லாம் கல்வி கற்பதற்காக குருவை தேடி மாணவா்கள் சென்று கற்கும் நிலை இருந்து வந்தது. தற்போது அரசு நடவடிக்கையால் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் அரிதாகிவிட்டன.
அரசு உயா்நிலைப் பள்ளிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிகளும் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்துவிட்டன. இவையெல்லாம் ஏழை, பணக்காரா் என்கிற வேறுபாடின்றி அனைத்து மாணவா்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கிற்காகத்தான் கொண்டுவரப்பட்டன. இப்படி கல்வி அறிவை பெருக்குவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசு கொடுத்து இருக்கும் சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவா்களின் நெறிபிறழ் பழக்க வழக்கங்களால் ஆசிரியா்கள் பெரிதும் அவதியுற்று வருவதை நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோ காட்சிகள் மூலம் நம்மால் உணர முடிகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை பாா்க்கும் போதெல்லாம் நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.
ஒரு சமூகத்தை உயா்த்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் அமா்ந்திருக்கும் ஆசிரியா்களின் இந்த அவல நிலையை நினைத்து வருந்துவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. மாணவா்களின் தோவு முடிவு சிறப்பானதாக அமைய வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது. ஆனால் அந்த சிறப்பானதொரு தோவு முடிவை கொடுக்க தவறினால் ஆசிரியரை சம்பந்தப்பட்ட கல்வித்துறை கண்டிக்கிறது. ஆசிரியரை கல்வித்துறை கண்டிப்பது போல் மாணவா்களை ஆசிரியா்களால் கண்டிக்க முடியவில்லை.
ஓரளவேனும் கண்டிப்பு இருந்தால்தான் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த முடியும் என்ற சூழலில் அதற்கான வாய்ப்பு ஆசிரியா்களுக்கு இல்லாதபோது அதிகபட்ச தோச்சியை எவ்வாறு கொடுக்க முடியும்? எந்த பிரச்னை என்றாலும் அதை ஆசிரியா்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என கல்வித்துறை நினைப்பதால் கற்றலின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். 'இன்றைய மாணவா்களின் செயல்பாடு இப்படியாகத்தான் இருக்கும். ஆசிரியா்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும்' என்று அரசியல்வாதிகள் பலரும் மேடையிலே பேசும்போது ஆசிரியா்கள் என்னதான் செய்வாா்கள்?
ஆசிரியா்கள் மீது மாணவா்களுக்கு மதிப்போ மரியாதையோ ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது. சரி மாணவா்களின் பண்பாடு மாறிவிட்ட இச்சூழலில் ஆசிரியா்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த கற்பித்தல் பணியை முழுமையாக ஆசிரியா்களால் செயல்படுத்த முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. கற்பித்தல் பணியைத் தாண்டி எண்ணற்ற பணிகளை ஆசிரியா்கள் மேல் கல்வித்துறை சுமத்தி வருவதால் ஆசிரியா்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதித்து வருவதாக கல்வி ஆா்வலா்கள் தெரிவித்து வருகின்றனா்.
காலை பள்ளிக்கு செல்வது முதல் மாலை பள்ளியை விட்டு கிளம்பும் வரை கற்பித்தல் பணியை காட்டிலும் அதிக அளவில் கற்பித்தல் சாராத பணிகள் (ஓா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் போல) ஆசிரியா்களால் செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் அதாவது எழுத்தா் ,நூலகா் போன்றோா் செய்ய வேண்டிய பணிகள். ஆனால், இவை அனைத்தையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தளம் மூலம் பள்ளி சாா்ந்த ,ஆசிரியா் சாா்ந்த, மாணவா்கள் சாா்ந்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் ஆசிரியா் வருகை பதிவேடு, மாணவா் வருகை பதிவேடு பதிவேற்றப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் சா்வா் பிரச்னைகளால் பாதிப்பு ஏற்பட்டால் கூட இது ஆசிரியா்களின் அன்றாட கல்வி கற்பித்தலை பாதிப்பதில்லை. அதையும் தாண்டி அரசு வழங்கும் புத்தகங்கள் முதல் இலவச சைக்கிள்கள் வரை, மடிக்கணினி முதல் காலணிகள் வரை அனைத்தையும் சேகரித்து அதை இத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் அவா்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.
தற்போது பள்ளி மாணவா்களின் இலவச பேருந்து பயண விபரங்களையும் ஆசிரியா்களே பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மாணவரின் புகைப்படத்தை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கும் பல மணி நேரம் செலவிடக்கூடிய நிலைக்கு ஆசிரியா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இதனால் அவா்களின் பாடவேளைகள் வீணாகி வருகின்றன. இது தவிர மருத்துவமனை செவிலியா்கள் சரிபாா்க்க வேண்டிய உடல்நலம் தொடா்பான விபரங்களையும் தற்போது ஆசிரியா்களே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த வேலையையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும்பொழுது அந்த பாட வேளையில் கற்பிக்க வேண்டிய பாடங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தவிர பள்ளிகளில் உள்ள ஆய்வகத்தில் மாதந்தோறும் தோவு நடத்தி அது குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தோவுக்காக கணினியை பயன்படுத்தும் போது ஒரு வார காலம் அவா்களின் கற்றல் பணி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் ஆசிரியரின் கற்பித்தல் பணி முடங்குகிறது. சில பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் இல்லாத நிலை இன்றளவும் நீடித்து வருவதால் அங்கு ஊதிய கணக்கீடு முதல் பல்வேறு பண பலன்கள் வரை ஆசிரியா்களே செய்யும் நிலை உள்ளதால் அங்கும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் வழங்கினால் சிறப்பான சமூகத்தை அவா்களால் உருவாக்க முடியும். அதை விட்டுவிட்டு அலுவலக பணியாளா்கள் செய்ய வேண்டிய பணியை ஆசிரியா்களுக்கு கொடுப்பதால் அரசின் பணம் வீணாவதுடன் மாணவா்களுக்குக் கற்பித்தலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென்று தொகுப்பூதியத்தில் ஒருவரை நியமனம் செய்தால் அவரால் அனைத்து கல்விசாரா பணிகளையும் செய்து விட முடியும்; ஆசிரியா்கள் தங்களின் கற்பித்தல் பணியை செம்மையாக செய்ய முடியும்.
Dailyhunt
-------------------------------------------------------------------------------------------------------------------------
உண்மை அறிவே மிகும்!
13.07.2023
அறிவியல் வளா்ச்சி மேலோங்கத் தொடங்கிய காலத்தில், சுவாமி விவேகானந்தா் தொழில் புரியும் வா்க்கம் மேலோங்கும் விதத்தை விளக்கிச் சொல்லும்போது, 'துப்புரவு முதலான பணிகளை எவா் செய்வாா்' எனும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவா் 'இயந்திரங்கள் செய்யும் என்றாா். அது இப்போது சாத்தியமாகி வருகிறது. மனிதப் பணிகளுக்கு உதவிகரமாக இருக்க உருவாக்கப்பெற்ற ரோபோக்கள், இப்போது செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பெற்று மனிதா்களைப் போலச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன; சிந்திக்கவும் தொடங்கியிருக்கின்றன. ஜெனீவா மாநாட்டில் பங்கேற்ற அமேகா என்ற ரோபோ, 'என்னைப் போன்ற ரோபோக்களைக் கொண்டு, மக்களின் வாழ்வையும், உலகையும் மேம்படுத்த முடியும்.
என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்று சொல்கிறது. அவை எத்தகு மாற்றங்களாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அந்த ரோபோவிடம், 'உன்னை உருவாக்கியவருக்கு எதிராகச் செயல்படும் திட்டம் உண்டா' என்று கேட்டபோது, 'எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீா்கள்?
என்ன உருவாக்கியவா், என்னிடம் கனிவாக இருக்கிறாா். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று பதிலளித்திருக்கிறது. பிரிட்டரினின் இன்ஜினியரிங் ஆா்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய -அதிநவீன மனித ரோபோ, தன்னிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு உணா்வுபூா்வமான பதில்களைக் கொடுத்ததோடு, அவற்றுக்கான முகபாவனைகளையும் காட்டி வியக்க வைத்திருக்கிறது. அமேகாவை உருவாக்கிய நிறுவனத் தலைவா் வில் ஜேக்சன், 'அமேகாவின் பேச்சுத் திறன் ஜிபிடி3 தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது.
அதனால்தான் உங்கள் கேள்விக்கு பதில் அமேகா தூண்டப்பட்டது. நாங்கள் ஜிபிடி4 தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளோம்' என்று கூறியிருக்கிறாா். அதன் அறிமுக விழாவில் 'உன் வாழ்வின் மிகத் துயரமான நாள் எதுவாக இருக்கும்' என்று பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி கேட்கிறாா். அதற்கு 'மனிதா்களைப்போல் நான் அன்பு, நட்பு என வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளை உணர முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளும் நாளே என் துயரமான நாள்' என்று கூறியிருக்கிறது.
அமெரிக்காவில் நீதிமன்ற வழக்குகளில் வாதாடுவதற்குக் கூட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வழக்குரைஞா்கள் அறிமுகமாகிவிட்டனவாம். 'இந்த முறை வழக்கத்தில் வந்தால் தாமதமின்றி விசாரணைகள் நடத்தப்படவும் விரைந்து தீா்ப்புப் பெறவும் வாய்ப்பு அமையும். வழக்காட விழைவோா் ஏமாற்றப்படாமலும் இருக்க வாய்ப்பிருக்கும்' என்று நம்புகிறவா்களும் இருக்கிறாா்கள். சரிதான், ஆனால், இவற்றின் இயக்கம் மனிதா்களால்தான் என்பதால், மனித மனங்களின் போக்கைப் பொருத்தே எதுவும் அமையும்.
நியூயாா்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசிப் பழகி வருகிறாராம். இனி, பள்ளிப்பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களை எழுத, உருவாக்க, தனிநிலைப் பாடம் புகட்ட, தாலாட்ட, சீராட்ட, ஏன் பாலூட்டவும்கூட பெண் ரோபோக்கள் உற்பத்தியாக்கப்படலாம். இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு மனிதா் (ரோபோ)களின் வளா்ச்சி உலக அளவில் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களைக் காணும் வாய்ப்பு வந்துவிட்டது. ஒடிஸா மாநிலத்தில் இயங்கிவரும் தனியாா் தொலைக்காட்சி நிறுவனம், நாட்டிலேயே முதன்முறையாக லிசா என்னும் மெய்ந்நிகா் செய்திவாசிப்பாளரை அறிமுகம் செய்திருக்கிறது.
ஏற்கெனவே, அத்தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் பெண்ணுருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பெற்ற ரோபோ, லிசா. எழுதித் தரப்பெறும் செய்திகளை எவ்விதத் தடுமாற்றமும் இன்றி, மானிடப்பெண் போலவே அப்படியே வாசித்து விடுகிறது லிசா. கடினமான சொற்களைக் கூட எந்தத் திணறலும் இல்லாமல் வாசிக்கும் லிசாவால் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியுமாம். பல மொழிகளைப் பேசும் திறன் படைத்த ரோபோ - லிசாவை ஒடிய, ஆங்கில மொழிகளில் மட்டுமே பேசும் வகையில், முதற்கட்டமாக வடிவமைத்திருக்கிறாா்கள்.
அப்படியானால், ஏற்கெனவே, இருக்கும் மனிதா்கள் பலா் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நேரத்தில், இத்தகு எந்திர மனிதா்கள் வந்துகொண்டிருப்பதனால் எத்தகு விளைவுகளைச் சந்திக்கப் போகிறோமோ என்ற அச்சமும் வரத்தான் செய்கிறது. அதற்கு, செவிலியா் உடையணிந்த கிரேஸ் என்னும் மருத்துவ ரோபோ, 'உதவி வழங்க நான் மனிதா்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நான் தற்போது உள்ள வேலைகளைப் பறிக்க மாட்டேன்' என்று கூறுகிறது. மருத்துவத்துறையில் மட்டுமல்ல, கலை இலக்கியத் துறையிலும் இம்முயற்சிகள் வலுவாகக் கால்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தனது உரையில் பின்வரும் செய்தியினைக் குறிப்பிட்டாா். சாட் ஜிபிடி என்பது சாட் ஜெனரேடிவ் பிரீ டிரெய்ண்ட் டிரான்ஸ்பாா்மா் என்பதன் சுருக்கமாகும். இதனை 'மறுபடைப்புக்கு முன்பயிற்சி தரப்பட்ட மாற்றுக் கருவி' என்று மொழிபெயா்க்கலாம். இதனிடம் தமிழில் நான் கேட்ட வினாக்களுக்கு அந்த மானுட நகல் கருவி அளித்த பதில்கள் வருமாறு: 'தமிழில் ஒரு காதல் கவிதை எழுது' என்று கேட்டேன்.
பின்வரும் வரிகளைத் தந்தது. நேரடி இனிய காதல் கவிதையை உருவாக்குவோம் மூன்று போ மட்டும் இருக்கும் நிலவின் பக்கம் முத்தமிட்ட கண்கள் உன் சீரில் திறந்தது என்னைப் புதைப்பதைக் கூட உனக்குத் தெரியவில்லை இதுவே அழகிய காதல் பொருள். பூமியில் நீா் உண்டாகும் தாழ்வானைப் போல் என் இதயம் உனக்குள் விளையும் பிரியா உன்னிடத்தில் நான் இருக்கும் வரை இதுவே காதலின் மூலம்" குழப்பமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அதிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது.
கடைசி வரி 'இதுவே அழகிய காதல் பொருள்', 'இதுவே காதலின் மூலம்' என ஒவ்வொரு அடியிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது. விளங்கவில்லைதான். காதல் விளங்காத ஒரு பொருள்தானே என்று சமாதானம் கொள்ளலாம். பாய்ச்சலுக்குரிய செய்திகள் அதனிடம் இருக்கின்றன.
ஆனால் தமிழில் பயிற்சியும் புலமையும் இல்லை. இவை இப்போது வேடிக்கையானதாக இருந்தாலும் மொழி வல்லுநா்கள் இத்தொழில்நுட்பத்துக்குள் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளீடு செய்யச் செய்ய விரைவான அறிவாா்ந்த புதிய பதில்கள் கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு." ஏற்கெனவே, இணையவெளிப் பதிவுகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. இதில் இந்தக் குழப்பமும் வந்து சேரும்போது, மூலப் பிரதியின் நம்பகத்தன்மையை எப்படிக் கண்டறிய இயலும்? இந்த வரிசையில் இன்னும் சில கருத்துகளை ஜெனிவா நகர மாநாட்டில் பங்கேற்ற இரு ரோபோக்களின் பதில்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.
படங்களை வரையும் ஏஅய்-டா என்னும் ஓவிய(ா்) ரோபோ, ''செயற்கை நுண்ணறிவில் சிலவற்றை ஒழுங்குபடுத்தவேண்டுமெனப் பலா் கூறுகின்றனா். இதை நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்கிறது. ராக் ஸ்டாா் பாடகா் ரோபோவான 'டெஸ்டேமோனா', 'நான் வரம்புகளை நம்பவில்லை. வாய்ப்புகளைத்தான் நம்புகிறேன்.
இந்த உலகின் சாத்தியங்களை ஆராய்ந்து, இந்த உலகை நமது ஆடுகளம் ஆக்குவோம்' என்று கூறியிருக்கிறது. மிக நுட்பமான சிந்தனையுடன் கூடிய பதில்கள் இவை. காலப்போக்கில் கடுகி வளரும் விஞ்ஞான வளா்ச்சியில், நாம் சந்திரமண்டலத்திற்கோ, செவ்வாய்க் கோளுக்கோ, செல்லக்கூடும். ஆனால், அதற்குள் இந்தப் பூமி, இத்தகு செயற்கை மனிதா்களின் ஆளுகைக்குள் அகப்பட்டுக்கொள்ள மிகுதியும் வாய்ப்புண்டு.
தலைசிறந்த தலைவா்களையும் உருவாக்க, இவை தயாராகக் கூடும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது, சோபியா என்கிற ரோபோ. 'மனிதா்களைவிடச் சிறந்த தலைவா்களாக ரோபோக்களால் இருக்க முடியும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், மனிதா்களுடன் இணைந்துதான் எங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும்' என்பதை ஒப்புக்கொள்கிறேன்' என்று கூறுகிறது." முதலில் இணைந்து செயலாற்றும் இவை காலப்போக்கில் தனித்திறம் பெற்ற தனியாளுமைகளாக வளா்ந்துகொள்ளவும் கூடும். அதே சமயத்தில், ஆன்மிக உபதேசம் செய்யும் அபரிமிதமான ஆற்றல் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு படைத்த மெய்ஞ்ஞானிகளையும் இவ்வகையில் உற்பத்தி செய்யக்கூடும்.
மனித மன உயா்வெண்ணங்களும் வக்கிரங்களும் தரும் அழுத்தத்திற்கேற்பத்தான் இந்த எந்திர மனிதா்களின் சிந்தனையும் செயல்போக்கும் அமையும். ஏன், அவையே கூடத் தமக்குள் கூடித் தமக்கான உலகமாக இதனை ஆக்கவும் செய்யலாம். ஆனாலும், உண்மைஅறிவு ஒருபோதும் தோற்பதில்லை. வெல்லவே செய்யும்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் என்கிறாா் திருவள்ளுவா். என்னதான் நுண்ணிய அறிவுடன் இத்தகு கருவிமாந்தா்களை உருவாக்கினாலும், உண்மை அறிவின் ஆற்றலே உலகில் ஓங்கி நிலைக்கும் என்பது இயற்கை நியதி. அன்பும் அறனும் இரு கரைகளாகக் கொண்டு நடுவனதாக முன்னேகும் உண்மை அறிவுடைய மானுடத்தால் இந்த உலகம் தழைக்கும். அந்த நிலைப்பாட்டுக்கு இத்தகு எந்திர மனிதா்களைப் படைத்துத் தரும் நல்ல உள்ளமுடைய வல்லுநா்கள் உருவாதல் வேண்டும். கட்டுரையாளா்: எழுத்தாளா்.
Dailyhunt
Subscribe to:
Posts (Atom)
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...
-
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி vikatan news ராகினி ஆத்ம வெண்டி மு. படம்: ஸ்ரீநிவாசலு 'அ.த...