Saturday, June 9, 2018

சம்பளம் வழங்குவதில் தாமதம் ஒத்துழைக்க விமானிகள் மறுப்பு

dinamalar 9.6.2018

புதுடில்லி: ஏர் - இந்தியா நிறுவனத்தில், விமானிகளுக்கு சம்பளம் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், 'நிறுவனத்துக்கு ஒத்துழைக்கப் போவதில்லை' என, விமானிகள் சங்கம் அறிவித்துள்ளது.



ஏர் - இந்தியா நிறுவன விமானிகளுக்கு, மே

மாத சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், விமானங்களை இயக்குவதில் ஒத்துழைக்கப்போவதில்லை இது குறித்து, இந்திய வர்த்தகஎன, இந்திய வர்த்தக விமானிகள் சங்கமும், ஏர் - இந்தியா விமானிகள் சங்கமும் முடிவு செய்து உள்ளன.விமானிகள் சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுவுக்கு, மண்டல நிர்வாக குழு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏர் - இந்தியா நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் புதிதாக சேர்ந்துள்ள விமானிகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால், மூத்த விமானிகள் பாதிக்கப்படுகின்றனர். மே மாதத்துக்கான சம்பளம், இதுவரை வழங்கப்படவில்லை.இதனால், விமானிகள், பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். உரிய நேரத்தில் சம்பளம் வழங்க, ஏர் - இந்தியா நிறுவனம் உறுதி அளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை தரும் வரை, ஏர் - இந்தியா

நிறுவனத்துக்கு ஒத்துழைக்கப் போவதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், ஊழியர்களுக்கு உரிய நேரத்தில், சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
63 வயது பாட்டிக்கு, 'குவா குவா'

Added : ஜூன் 09, 2018 00:38 |




சென்னை: செயற்கை முறை கருவூட்டல் வாயிலாக, 63 வயதான பாட்டிக்கு, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த தம்பதியர், கிருஷ்ணன், 71 - செந்தமிழ் செல்வி, 63. இவர்களுக்கு, 42 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; குழந்தை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பழனியில் உள்ள குழந்தையின்மை சிகிச்சை மையத்திற்கு சென்றனர். அங்கு, டாக்டர் செந்தாமரை செல்வி தலைமையிலான டாக்டர்கள், செந்தமிழ் செல்வியை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு, மாதவிடாய் நின்று, 10 ஆண்டுகள் ஆகியிருந்ததும், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்ததும் தெரிய வந்தது; தொடர் சிகிச்சை அளித்தனர். பின், செயற்கை முறை கருவூட்டல் செய்து, கருமாற்று சிகிச்சையை மேற்கொண்டனர். தற்போது, செந்தமிழ் செல்விக்கு, 3.2 கிலோ எடையுள்ள, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், வயதான தம்பதியர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து, டாக்டர் செந்தாமரை செல்வி கூறியதாவது: செந்தமிழ் செல்விக்கு, வயது முதிர்ந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் குறையவில்லை. எனவே, அவரின் உடல்நலம் சார்ந்த சிகிச்சைகளை அளித்து, தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து, உரிய ஆலோசனைகள் வழங்கினோம். அவர், மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். தற்போது, அழகான குழந்தை பெற்று நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதே நாளில் அன்று

Added : ஜூன் 08, 2018 22:57



ஜூன் 9, 1949

கிரண் பேடி: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், பிரகாஷ்லால் - பிரேம் லதா தம்பதிக்கு மகளாக, 1949, ஜூன், 9ல் பிறந்தார். முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான இவர், 1971ல் நடந்த, ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றார். 1972ல், நாட்டிலேயே முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரியானார். டில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். கடந்த, 1993ல், டில்லி சிறைச்சாலைகளுக்கு, பொது ஆய்வாளராக இருந்தபோது, திஹார் சிறைகளில், இவர் ஆற்றிய சீர்திருத்தங்கள், பலரின் பாராட்டை பெற்றது. 2007ல், காவல் துறையில் இருந்து, விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2015ல், பா.ஜ.,வில் இணைந்தார். டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். தீவிர அரசியலில் இருந்து விலகிய அவர், 2016, மே 29ல், புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுனராக பொறுப்பேற்றார். அவர் பிறந்த தினம் இன்று.
'அசல் சான்றிதழ் காட்டாவிட்டால் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது'

Added : ஜூன் 09, 2018 05:06


'இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்து, அசல் சான்றிதழ்கள் காட்டாதவர்களின் பெயர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெறாது; கவுன்சிலிங்கிலும் பங்கேற்க முடியாது' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:

 இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை சார்பில் அனுப்பப்படும், மொபைல்போன், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில்களை, ஒவ்வொரு மாணவரும் அவ்வப்போது பார்க்க வேண்டும்

 சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட உதவி மையத்திற்கு வர வேண்டும். வீட்டில் இருந்து புறப்படும் போதே, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள, சான்றிதழ்களை ஆய்வு செய்து எடுத்து வர வேண்டும்

 தவிர்க்க முடியாத காரணங்களால், சான்றிதழ் சரி பார்ப்புக்கு, குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாதவர்கள், அதே நாளில், ஏதாவது ஒரு நேரத்திற்குள் வந்து விட வேண்டும்.

 அதிலும், வர முடியாதவர்கள், எந்த மாவட்டத்தினராக இருந்தாலும், வரும், 17ம் தேதி, சென்னை அண்ணா பல்கலை உதவி மையத்திற்கு வர வேண்டும்.

 கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க, ஒதுக்கப்பட்ட நேரத்தில் வருவது, மாணவர்களின் கவுன்சிலிங் பணியை எளிதாக்கும்

 சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது, ஆன்லைனில் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதில், புகைப்படம் ஒட்டி எடுத்து வர வேண்டும்.

சான்றிதழ்களின் நகல் மட்டுமின்றி, அசல் சான்றிதழையும் கட்டாயம் எடுத்து வரவேண்டும். அசல் சான்றிதழ் காட்டாதவர்களின் பெயர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெறாது. தரவரிசையில் இடம் பெறாவிட்டால், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது

 வேறு கல்லுாரிகளில் சேர்ந்து, அங்கு சான்றிதழ்களை அளித்தவர்கள், அந்த கல்வி நிறுவன முதல்வரிடம் இருந்து, சான்றிதழ் அங்கு இருப்பதற்கான, 'போனபைட்' என்ற, அத்தாட்சி சான்றிதழ் வாங்கி வர வேண்டும்.

 இறுதியில், கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கிய பின், சான்றிதழ்களை முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே, கல்லுாரிகளில் சேர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, tnea2018@annauniv.edu என்ற, இ - மெயில் முகவரிக்கு கடிதம் அனுப்பலாம். மேலும், 044 - 2235 9901 என்ற எண்ணில் இருந்து, இறுதியில், 20ம் வரிசை வரையில் உள்ள எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -

அந்த்யோதயா ரயில் துவக்கம்தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி 

dinamalar 09.06.2018

சென்னை: சென்னை, தாம்பரம் -- திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கொண்ட, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நேற்று துவங்கப்பட்டது.

தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு நடந்த விழாவில், ரயில்வே இணை அமைச்சர், ராஜென் கோஹைய்ன், புதிய ரயில் சேவையை, கொடியசைத்து துவங்கி வைத்தார். தென்னக ரயில்வே பொது மேலாளர், குல்ஷ்ரேஸ்தா, விழாவிற்கு தலைமை தாங்கினார்.விழாவில், அமைச்சர், ராஜென் கோஹைய்ன் பேசியதாவது: இந்திய ரயில்வே துறை, நான்கு ஆண்டுகளில், சிறப்பாக

வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி உத்தரவின் அடிப்படையில், பல திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. பல, புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுவதோடு, ரயில்களின் வேகம் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள், சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்பேசியதாவது: தமிழக ரயில்வே வரலாற்றில், முக்கிய நாளாக, இன்று திகழ்கிறது. கோவையில், உதய் எக்ஸ்பிரஸ்; தாம்பரத்தில், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில் பயணியரின் நீண்ட நாள் கோரிக்கைகள், இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது

.தமிழகத்தில், 20 ஆயிரத்து, 64 கோடி ரூபாய் செலவில், 27 ரயில்வே திட்ட பணிகள் நடந்த வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர், நவீன் குலாடி, ஸ்ரீபெரும்பதுார் தொகுதி, எம்.பி., - ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகாராஷ்டிராவில் கனமழை

Added : ஜூன் 09, 2018 05:04



மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் தத்தளித்தன. கொங்கன் பகுதி, கோவா, ம.பி., மகாராஷ்டிரா உட்பட 7 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே கவுசா பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
டிரம்ப் - கிம் ஜாங் சந்திப்பு : சிங்கப்பூரில் விமானங்களுக்கு கட்டுப்பாடு

Added : ஜூன் 09, 2018 01:24



சிங்கப்பூர்: அமெரிக்க - வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, வடகொரியா இடையே நிலவிய உரசல்கள் முடிந்து, தற்போது பேச்சுவார்த்தையை நெருங்கியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுகிறது. தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நனவாக உள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. இச்சந்திப்பு நிகழும் பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. ஜூன் 12 ல் சிங்கப்பூரின் செந்தோசா தீவில், இருநாட்டு தலைவர்கள் சந்திக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது.
சிங்கப்பூரின் சில பகுதிகளை 'சிறப்பு நிகழ்ச்சி பகுதியாக' அறிவித்துள்ளது.இந்நிலையில் ஜூன் 11, 12, 13 ல் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாங்கி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும், வான்பரப்பில் தங்களது வேகத்தை குறைத்தல் மற்றும் விமான ஒடுதளத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...