Saturday, June 9, 2018

63 வயது பாட்டிக்கு, 'குவா குவா'

Added : ஜூன் 09, 2018 00:38 |




சென்னை: செயற்கை முறை கருவூட்டல் வாயிலாக, 63 வயதான பாட்டிக்கு, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த தம்பதியர், கிருஷ்ணன், 71 - செந்தமிழ் செல்வி, 63. இவர்களுக்கு, 42 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; குழந்தை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பழனியில் உள்ள குழந்தையின்மை சிகிச்சை மையத்திற்கு சென்றனர். அங்கு, டாக்டர் செந்தாமரை செல்வி தலைமையிலான டாக்டர்கள், செந்தமிழ் செல்வியை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு, மாதவிடாய் நின்று, 10 ஆண்டுகள் ஆகியிருந்ததும், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்ததும் தெரிய வந்தது; தொடர் சிகிச்சை அளித்தனர். பின், செயற்கை முறை கருவூட்டல் செய்து, கருமாற்று சிகிச்சையை மேற்கொண்டனர். தற்போது, செந்தமிழ் செல்விக்கு, 3.2 கிலோ எடையுள்ள, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், வயதான தம்பதியர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து, டாக்டர் செந்தாமரை செல்வி கூறியதாவது: செந்தமிழ் செல்விக்கு, வயது முதிர்ந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் குறையவில்லை. எனவே, அவரின் உடல்நலம் சார்ந்த சிகிச்சைகளை அளித்து, தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து, உரிய ஆலோசனைகள் வழங்கினோம். அவர், மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். தற்போது, அழகான குழந்தை பெற்று நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024