Thursday, June 28, 2018

புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க 125 ரூபாய் நாணயம் வெளியீடு

Added : ஜூன் 28, 2018 02:34 




 புதுடில்லி : புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை(ஜூன் 29) வெளியிடுகிறார்.

கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...