Wednesday, June 27, 2018


இந்து முறைப்படி திருமணம்: சீன காதல் ஜோடி அசத்தல்

Updated : ஜூன் 27, 2018 00:53 | Added : ஜூன் 26, 2018 22:12 |




மயிலாடுதுறை: சீனாவைச் சேர்ந்த காதலர்கள், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த, டாக்டர் யான், ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்த, அழகுக்கலை நிபுணரான ரூபிங்கை காதலித்து வந்தார். இருவரும், இந்து கலாசாரத்தின் மீதுள்ள பற்று காரணமாக, இந்து முறைப்படி, தமிழகத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இருவரும் நேற்று, நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த காரைமேடு சித்தர்புரத்திற்கு வந்தனர். சித்தர்களை வழிபட்டு, கோ பூஜை, முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாங்கல்ய தாரணம் செய்து, யான் - ரூபிங் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து, திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கிராம மக்களை வணங்கி, ஆசி பெற்றதுடன், அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

KGMU starts clinic for L GBTQ patients

 KGMU starts clinic for L GBTQ patients  TIMES OF INDIA LUCKNOW 27.12.2024 Lucknow : King George's Medical University (KGMU) launched a ...