Wednesday, June 27, 2018

லட்சம், 'ஸ்மார்ட் கார்டு'கள் வாங்க நாளை கடைசி நாள்

Added : ஜூன் 27, 2018 00:30


ரேஷன் கடைகளில் உள்ள, ஒரு லட்சம், 'ஸ்மார்ட்' கார்டுகளை, மக்கள் பெற்றுக் கொள்ள, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், புதிதாக, ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விரும்புவோர், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, 'ஆதார்' எண் கட்டாயம். கார்டு அச்சிடப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பியதும், அந்த விபரம், கார்டுதாரர்களின், மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்.,சில் தெரிவிக்கப்படும். இதன்படி, எஸ்.எம்.எஸ்., அனுப்பிய, ஒரு லட்சம் பேர், தங்களின் கார்டுகளை வாங்காமல் உள்ளனர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளுக்கு அனுப்பி, பல நாட்கள் ஆகியும், ஒரு லட்சம் கார்டுகள் வரை, பயனாளிகள் வாங்காமல் கிடக்கின்றன. ஊழியர்கள், அந்த கார்டை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. பயனாளிகள், நாளைக்குள், தங்களின் கார்டுகளை பெற்று கொள்ள வேண்டும். இல்லையேல், அந்த கார்டுகள், உணவுத் துறை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். ஆதார் நகல் போன்ற ஆவணங்கள் பெறப்பட்ட பிறகே, பயனாளிகளிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025