Wednesday, June 27, 2018

மாணவர் விண்ணப்பம் ஏற்பு : 'தினமலர்' செய்தியால் விமோசனம்

Updated : ஜூன் 26, 2018 23:32 | Added : ஜூன் 26, 2018 22:25






சிவகங்கை,:'தினமலர்' நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சிவகங்கை மாணவர் வசந்தின் மருத்துவ படிப்பு விண்ணப்பத்தை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஏற்றது.

சிவகங்கை அருகே, காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் வசந்த். பிளஸ் 2வில், 1,125 மதிப்பெண், 'நீட்' தேர்வில், 384 மதிப்பெண் பெற்றார். ஓ.பி.சி., பிரிவினர், 96 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்பதால்,
மருத்துவ படிப்பு எளிதில்கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.வசந்த், ஜூன், 14ல் அனுப்பிய மருத்துவப் படிப்பு விண்ணப்பம், தபால் துறையின் அஜாக்கிரதையால் ஒன்பது நாட்கள் தாமதமாக சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு சென்றது. இதனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.இது குறித்து, நமதுநாளிதழில் நேற்று செய்தி வெளியானது. 

இதையடுத்து, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, 'உரிய நாளில் அனுப்பியதற்கான சான்றை சமர்ப்பித்தால், இதுபோன்ற மாணவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படும்' என, நேற்று அறிவித்தார். இதன்படி வசந்தின் விண்ணப்பத்தை இயக்குனரகம் ஏற்றது.வசந்த்தின் தாயார் ஞானஜோதி கூறுகையில், ''விண்ணப்பம் ஏற்பதற்கு காரணமான, தினமலர் நாளிதழுக்கு நன்றி,''என்றார்.

No comments:

Post a Comment

KGMU starts clinic for L GBTQ patients

 KGMU starts clinic for L GBTQ patients  TIMES OF INDIA LUCKNOW 27.12.2024 Lucknow : King George's Medical University (KGMU) launched a ...