Friday, June 29, 2018

மருத்துவ கல்லூரிகளில் பிற மாநிலத்தவர் சேருவதை தடுக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர்

Added : ஜூன் 28, 2018 20:44




சென்னை: ''மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில், போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து, வெளிமாநில மாணவர்கள் சேருவதை தடுக்க, விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: 'நீட்' தேர்வு காரணமாக, கிராமப்புற மாணவர்களின், மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கல்வி உரிமையை சிறிதும் மதிக்காமல், சர்வாதிகாரி ரீதியில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, நீட் தேர்வு, மாணவியரின் உயிரை மட்டும் இல்லாமல், அவர்களின் பெற்றோர் உயிரையும் காவு கண்டுள்ளது.கேள்வித்தாளில் குழப்பம், தேர்வு மையங்களில் குழப்பம், இருப்பிட சான்றிதழில் குழப்பம் என, தமிழக மாணவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக, இருப்பிட சான்றிதழ் பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேரக்கூடிய சூழ்நிலை உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருப்பிட சான்று விவகாரத்தில், கடந்த ஆண்டை போல் மோசடி நடைபெறாமலிருக்க, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டாலும், மற்ற மாநிலத்தவர்கள், யாருடைய துணையுடனோ, இங்கு சேர்ந்து விடுகின்றனர்.நீட் தேர்வுக்கு எதிராக, சட்டசபையில், 2017 பிப்., 1ல், இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம்.அதன் நிலை என்ன என்பது, இதுவரை தெரியவில்லை. அந்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு மவுனம் சாதிப்பதற்கு, என்ன காரணம்?மத்திய அரசு, மசோதாவை கிடப்பில் போட்டிருந்தால், அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறவும், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசுக்கு உடனடியாக உத்தரவிடவும், தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும்.அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில், தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன.இவற்றில், அகில இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீடு, 15 சதவீதம் தவிர, மற்ற இடங்களில், பிற மாநில மாணவர்கள் சேராமல் இருக்க, விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.தமிழக மாணவர்கள் தவிர, வேறு மாணவர்கள் சேர முடியாது. இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதையும் மீறி, 'போலி சான்றிதழ் கொடுத்து, கல்லுாரியில் சேர்ந்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, நீட் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நீட் தொடர்பான வழக்கும், நிலுவையில் உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...