Saturday, June 30, 2018

தெரியாத நபருக்கு, 'லிப்ட்' கொடுப்பது சட்டப்படி குற்றம்!

Added : ஜூன் 29, 2018 20:17

தெரியாத நபருக்கு, 'லிப்ட்' கொடுத்த, கார் உரிமையாளருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், மும்பையில் நடந்துள்ளது.மனிதாபிமான அடிப்படையிலோ, அறியாமையாலோ செய்யும் காரியங்கள், சட்டத்தின் முன், தண்டனைக்கு உரியதாக மாறி விடுவதுண்டு; அப்படிப்பட்ட சம்பவத்தை விளக்குவது தான், இந்த செய்தி.சமீபத்தில், பரபரப்பான காலை நேரத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், மழை வெளுத்து வாங்கியது. அவசரமாக, அலுவலகம் செல்ல விரும்பியோர், வழியில் சென்ற வாகனங்களை கை காட்டி, ஏறிச் சென்றனர்.நிதின் நாயர் என்பவர், தன் காரை ஓட்டிச் சென்ற போது, ஏர்ரோலி சர்க்கிள் பகுதியில், 60 வயது முதியவரும், ஐ.டி., நிறுவன ஊழியர் இருவரும், காந்தி நகர் வரை, 'லிப்ட்' கேட்டனர். காந்தி நகரை கடந்து, நிதின் செல்ல வேண்டி இருந்ததால், மூவருக்கும் லிப்ட் கொடுத்தார்.சிறிது தொலைவில், காரை மடக்கினார், போலீஸ் அதிகாரி. காரில் இருப்போரின் விபரம் கேட்டார். நாயர், லிப்ட் கொடுத்த விஷயத்தை சொன்னார். போலீஸ் அதிகாரி, நிதின் நாயரின் லைசென்சை பறித்து, அபராத ரசீதை நீட்டினார். அபராதத்தை கட்டி விட்டு, லைசென்சை வாங்கிச் செல்லும்படி கூறினார்.அபராத ரசீது, லஞ்சத்துக்கான அச்சாரமாக இருக்கலாம் என, எண்ணினார் நிதின். மறுநாள், போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவரை, நீதிமன்றத்தில் அபராதம் கட்டி, லைசென்சை பெற்றுக்கொள்ளும்படி, போலீசார் கூறினர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது.'சொந்த வாகனத்தில், தெரியாத நபரை ஏற்றுவது, மோட்டார் வாகன சட்டம், 66/192ன் படி, தண்டனைக்குரிய குற்றம்' என்பதை, போலீசார் விளக்கினர். நீதிபதி முன், குற்றத்தை ஒப்புக்கொண்டு, நிதின் நாயர், அபராதத்தை கட்டினார்.லைசென்ஸ் வாங்க, போலீஸ் ஸ்டேஷன் சென்ற, நிதின் நாயரிடம், 'இனி யாருக்காவது லிப்ட் கொடுத்தால், உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்' என, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிதின், தன், 'பேஸ்புக்' பக்கத்தில், 'இப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தால், சாலையில் யாராவது உயிருக்கு போராடினால் கூட, யாரும் உதவ மாட்டார்கள்' என, குமுறி உள்ளார்.இது உண்மையா என்பது குறித்து, சென்னை வழக்கறிஞர், வி.எஸ்.சுரேஷ் கூறியதாவது:அறிமுகம் இல்லாத நபர்கள், வாகனங்களை மறித்து, ஏறிச் சென்று, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில், உடைமைகளையும், உயிரையும் பறித்து செல்கின்றனர். சிலர், வரியில் இருந்து விலக்கு பெற, சொந்த வாகனமாக பதிவு செய்து, அதை வணிக நோக்கில், பயணியர் வாகனமாக பயன்படுத்துகின்றனர்.இதனால், அரசுக்கு, வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பயணியருக்கு பாதுகாப்பும் கிடைப்ப தில்லை. இவற்றைத் தவிர்க்கவே, இந்த சட்டம் உள்ளது. ஒருவருக்கு லிப்ட் கொடுக்கும் முன், பலமுறை யோசிப்பது தான், சட்டம் கடந்து, பாதுகாப்புக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

KGMU starts clinic for L GBTQ patients

 KGMU starts clinic for L GBTQ patients  TIMES OF INDIA LUCKNOW 27.12.2024 Lucknow : King George's Medical University (KGMU) launched a ...