Wednesday, June 27, 2018

கொட்டாவி விட்ட மாணவனை அறைந்த ஆசிரியர் மீது வழக்கு

Added : ஜூன் 27, 2018 00:55


தானே: மஹாராஷ்டிர மாநிலத்தில், காலை இறைவணக்கத்தின்போது, கொட்டாவி விட்ட மாணவனை அறைந்த, பள்ளி தலைமை ஆசிரியர் மீது, பெற்றோர் அளித்த புகாரை யடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், தானே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், காலை இறைவணக்கத்தின் போது, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன், கொட்டாவி விட்டதை, தலைமை ஆசிரியர் கவனித்தார்.இறைவணக்கம் முடிந்ததும், அந்த மாணவனை அழைத்த தலைமை ஆசிரியர், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மாலை வீடு திரும்பியதும், தலைமை ஆசிரியர் அறைந்தது குறித்து, மாணவன், தன் பெற்றோரிடம் கூறினான். மாணவனின் தந்தை அளித்த புகாரையடுத்து, தலைமை ஆசிரியர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025