செவ்வாழையில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதா ?
செவ்வாழை உண்பதால் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை தினமும் உண்டு வந்தால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவற்றை இப்பொழுது காண்போம்.
செவ்வாழையின் சத்துக்கள்
செவ்வாழையில் இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் எ,கால்சியம், பைபர், பொட்டாசியம் மற்றும் நெறைய சத்துக்கள் நிறைந்து உள்ளன.
1. மலசிக்கல்
செவ்வாழையில் பைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளது. பைபர் மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது.தினமும் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்னும் பிரச்சினை வரவே வராது. மேலும் இது குடல் மற்றும் வயிற்றின் ஆரோக்கியம் மேம்படும்.
2.கிட்னியில் கல் ஏற்படுவதை தடுக்கும்
செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் கிட்னியில் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது கிட்னியில் கல் ஏற்படுவதை தடுக்கும் தன்மை உடையது.
3. வைட்டமின் சி நிறைந்து
செவ்வாழையில் வைட்டமின் சி சத்து மிகுதியாக உள்ளது.வைட்டமின் சி உடலுக்கு மிகவும் முக்கியம். அவை உணவில் இருந்து இரும்பு சத்து உறிஞ்சிவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.மேலும் வைட்டமின் சி அதிகமாக எடுத்துக்கொண்டால் உங்களின் தலை முடி மற்றும் தோல் ஆரோக்கியம் மேம்படும்.
4. வயது ஆவதை தடுக்கும்
செவ்வாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகமா உள்ளது.அவை ஆக்ஸிடேஷன் என்று சொல்லக்கூடிய வயது முதிர்ச்சியை தடுக்கும். தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வாழலாம்.
5. உடல் எடை குறைப்பு
செவ்வாழையில் பைபர் என்னும் நார் சத்து அதிகமாக உள்ளது.இதனை தினமும் உட்கொண்டால் உடல் எடை குறைவதோடு தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் குறையும்.மேலும் நார் சத்து உணவை அதிகமாக உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள சக்கரை அளவு குறையும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
6. ரத்த விருத்தி
செவ்வழியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் நிறைந்து உள்ளது. இது உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எனவே தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வர வேண்டும்.
7. உடனடி ஆற்றல்
தினமும் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்.விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்பவர்கள் தினமும் இதனை உட்கொண்டு வந்தால் தேவையான சக்தி கிடைக்கும்.
No comments:
Post a Comment