Thursday, June 28, 2018

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விபத்தில் பலி

Published : 27 Jun 2018 21:45 IST

சென்னை
 


ஐஏஸ் அதிகாரி ஓய்வு விபத்தில் சிக்கிய கார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச்செயலாளராக இருந்த ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி தனது வீட்டருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தனிச்செயலாளரக இருந்து ஓய்வுப்பெற்றவர் விஸ்வநாதன்(77) இவர் ஓய்வுக்கு பின் அண்ணா நகர் பொன்னி காலனியில் வசித்து வந்தார்.
 
இன்று மாலை தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை வீட்டின் உள்ளே எடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக பின்னோக்கி வேகமாக சென்றது.

இதில் காருக்கும் காரின் கதவுக்கும் இடையில் சிக்கிய விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். தலையில் காயத்துடன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025