Tuesday, June 26, 2018

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.60 கோடியில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் மையம்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Published : 26 Jun 2018 06:55 IST

சென்னை




சட்டப்பேரவை | கோப்புப் படம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.60 கோடி யில் ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்’ அமைக்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்: யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ‘சர்வ தேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம்’ அமைக்கப்படும். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் இந்த மையத்தில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் பிரிவு டன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை ஏற்படுத்தப்படும். தேவையான பணியாளர்களும் நியமிக்கப்படுவர்.

மேலும், இந்த மையத்தில் இயற்கையான சூழலில் யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 985 துணை சுகாதார நிலையங்கள் ரூ.82 கோடியே 2 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த சுகாதாரம் மற் றும் நலவாழ்வு மையங்களாக மேம்படுத்தப்படும். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் தற்போதுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் கூடுதலாக 3 தளங்கள் ரூ.55 கோடியே 55 லட்சத்தில் கட்டப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற் போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் கட்டிடத்தின் மேல் 5 முதல் 8 வரை 4 தளங்கள் ரூ.42 கோடியே 88 லட்சத்தில் கட்டப்படும். சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடியில் தரை தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

மதுரை, கோவை, நெல்லை, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.22 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்காக ‘பிரேக்கி’ தெரப்பியுடன் கூடிய ‘சிடி ஸ்டிமுலேட்டர்’ மற்றும் ‘பங்கர்’ கருவிகள் நிறுவப்படும். தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை திட்டத்தின்படி 20 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் அவசரகால சிகிச்சை மையங்களுக்கு ரூ.21 கோடியே 27 லட்சத்தில் நவீன கருவிகள் வழங்கப்படும்.

நடப்பாண்டில் 96,200 காச நோயாளிகளுக்கு ரூ.20 கோடியே 20 லட்சத்தில் ஊட்டச் சத்து உணவு வழங்கப்படும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடியில் ‘மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்’ அமைக்கப்படும். காஞ்சிபுரம், நீலகிரி, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் நடப்பாண் டில் ரூ.20 கோடியில் மாணவியர் விடுதிகள் கட்டப்படும்.

சென்னை எழும்பூர், பூந்தமல்லி, விழுப்புரம் ஆகிய 3 இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு ரூ.17 கோடியே 20 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Recovery of commutation: Ex-forest officials move CAT .‘Officers Knew Rule When They Opted For Scheme’

Recovery of commutation: Ex-forest officials move CAT . ‘Officers Knew Rule When They Opted For Scheme’ SagarKumar.Mutha@timesofindia.com 29...