`ஜியோ சேவையில் சிக்கல்?’ - 3 மணி நேரம் அவதிக்குள்ளான வாடிக்கையாளர்கள்
கலிலுல்லா.ச
ஜியோ சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தொலைபேசியிலிருந்து கால் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. பின், சிலமணி நேரத்தில் அது சரியானது.
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் கால்பதித்தது முதல் மற்ற சிம் நிறுவனங்களுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. காரணம், அதுவரை ஒருமாதத்துக்கு ஒரு ஜி.பி என்று மற்ற நிறுவனங்கள் வழங்கிவந்த 4ஜி சேவையை, ஒருநாளைக்கு ஒரு ஜி.பி. என ஜியோ அறிவித்தது. குறைந்த விலை இன்டர்நெட் சேவை மட்டுமின்றி, பல்வேறு சலுகைககளை வாரி வழங்கியது ஜியோ. இதன்காரணமாக ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்த்துக்கொண்டது. குறிப்பாக, இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டது.
இந்நிலையில், இன்று மாலை சுமார் 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜியோ மூலம் கால் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல இன்டர்நெட் வசதியும் துண்டிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து, சில மணி நேரத்திலேயே இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது.

No comments:
Post a Comment