Saturday, June 9, 2018

சம்பளம் வழங்குவதில் தாமதம் ஒத்துழைக்க விமானிகள் மறுப்பு

dinamalar 9.6.2018

புதுடில்லி: ஏர் - இந்தியா நிறுவனத்தில், விமானிகளுக்கு சம்பளம் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், 'நிறுவனத்துக்கு ஒத்துழைக்கப் போவதில்லை' என, விமானிகள் சங்கம் அறிவித்துள்ளது.



ஏர் - இந்தியா நிறுவன விமானிகளுக்கு, மே

மாத சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், விமானங்களை இயக்குவதில் ஒத்துழைக்கப்போவதில்லை இது குறித்து, இந்திய வர்த்தகஎன, இந்திய வர்த்தக விமானிகள் சங்கமும், ஏர் - இந்தியா விமானிகள் சங்கமும் முடிவு செய்து உள்ளன.விமானிகள் சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுவுக்கு, மண்டல நிர்வாக குழு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏர் - இந்தியா நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் புதிதாக சேர்ந்துள்ள விமானிகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால், மூத்த விமானிகள் பாதிக்கப்படுகின்றனர். மே மாதத்துக்கான சம்பளம், இதுவரை வழங்கப்படவில்லை.இதனால், விமானிகள், பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். உரிய நேரத்தில் சம்பளம் வழங்க, ஏர் - இந்தியா நிறுவனம் உறுதி அளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை தரும் வரை, ஏர் - இந்தியா

நிறுவனத்துக்கு ஒத்துழைக்கப் போவதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், ஊழியர்களுக்கு உரிய நேரத்தில், சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024