அந்த்யோதயா ரயில் துவக்கம்தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
dinamalar 09.06.2018
சென்னை: சென்னை, தாம்பரம் -- திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கொண்ட, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நேற்று துவங்கப்பட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு நடந்த விழாவில், ரயில்வே இணை அமைச்சர், ராஜென் கோஹைய்ன், புதிய ரயில் சேவையை, கொடியசைத்து துவங்கி வைத்தார். தென்னக ரயில்வே பொது மேலாளர், குல்ஷ்ரேஸ்தா, விழாவிற்கு தலைமை தாங்கினார்.விழாவில், அமைச்சர், ராஜென் கோஹைய்ன் பேசியதாவது: இந்திய ரயில்வே துறை, நான்கு ஆண்டுகளில், சிறப்பாக
வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி உத்தரவின் அடிப்படையில், பல திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. பல, புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுவதோடு, ரயில்களின் வேகம் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள், சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்பேசியதாவது: தமிழக ரயில்வே வரலாற்றில், முக்கிய நாளாக, இன்று திகழ்கிறது. கோவையில், உதய் எக்ஸ்பிரஸ்; தாம்பரத்தில், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில் பயணியரின் நீண்ட நாள் கோரிக்கைகள், இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது
.தமிழகத்தில், 20 ஆயிரத்து, 64 கோடி ரூபாய் செலவில், 27 ரயில்வே திட்ட பணிகள் நடந்த வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர், நவீன் குலாடி, ஸ்ரீபெரும்பதுார் தொகுதி, எம்.பி., - ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment