Friday, September 29, 2017

பல்லாவரத்தில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; 2 பேர் கைது



பல்லாவரத்தில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

செப்டம்பர் 29, 2017, 04:45 AM
தாம்பரம்,

மதுரையை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 42) பள்ளிக்கூடம் நடத்திவந்தார். இவரிடம் பள்ளியை விரிவுபடுத்த ரூ.1½ கோடி சென்னையை சேர்ந்த நிதிநிறுவன அதிபரிடம் கடன் வாங்கித் தருவதாக ஒரு கும்பல் தொடர்புகொண்டது. இதை நம்பிய அவர், உறவினர் பாலாஜி என்பவரை அழைத்துக் கொண்டு பள்ளி சொத்து ஆவணங்களுடன் பல்லாவரத்திற்கு வந்தார்.

பல்லாவரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள லாட்ஜுக்கு வரச்சொன்ன அந்த கும்பல் அங்கு ஒருவரை அறிமுகப்படுத்தியது. கடன் வழங்குவதற்கான பத்திர செலவுக்கு என ரூ.1½ லட்சம் வாங்கினர். அப்போது ஒரு பையை கொடுத்து இதில் ரூ.50 லட்சம் உள்ளது. இப்போது பிரிக்காதீர்கள், ஆவணங்களை சோதனை செய்துவிட்டு வருகிறோம் என கூறிவிட்டு நழுவ முயன்றனர்.

2 பேர் கைது

அவர்களது நடவடிக்கை சந்தேகமாக இருந்ததால் பாலாஜி பணம் இருந்த பையை பிரித்து பார்த்தார். அதில் பணத்துக்கு பதில் காகிதங்கள் ரூபாய் நோட்டுகளைப்போல இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்குவந்த பொதுமக்களும், அருகில் உள்ள பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் இருந்துவந்த போலீசாரும் நழுவ முயன்ற மோசடி கும்பலை சேர்ந்த தங்கராஜ் (58), செல்வராஜ் (62) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்

இந்த மோசடி தொடர்பாக பல்லாவரம் போலீஸ் உதவி கமிஷனர் விமலன் விசாரணை நடத்தினார். அப்போது மோசடி கும்பலை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட மேலும் 3 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. 2 பேரை கைது செய்த போலீசார் தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
தேசிய செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது


ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது. ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது.

செப்டம்பர் 29, 2017, 05:00 AM
ஐதராபாத்,

ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை நேற்று அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதில் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய உத்தரவினால் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிய சாதனங்கள் வாங்குவதற்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ரூ.10 கோடி அனுமதித்துள்ளார்.

கடமைகளை சரி வர செய்யாத அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய தயங்க மாட்டேன் என அவர் எச்சரித்துள்ளார். இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணியவும், 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாநில செய்திகள்

சிறிய விழாவாக நடத்தி அவமதிக்க வேண்டாம் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் திறக்க வேண்டும் நடிகர் பிரபு


“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்க வேண்டும்” என்று நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செப்டம்பர் 29, 2017, 05:30 AM

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. சிவாஜி மணிமண்டபத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவாஜி கணேசன் மகனும் நடிகருமான பிரபு, மணிமண்டபத்தை முதல்-அமைச்சர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது, ஜெயலலிதாவின் கனவு திட்டமாகும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் விழாவுக்கு தலைமையேற்று மணிமண்டபத்தை திறந்து வைத்து எங்கள் தந்தையின் ஆத்மாவுக்கு பெருமை சேர்த்து இருப்பார்.

தமிழக அரசு, மரியாதைக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம் முதல்-அமைச்சரோ துணை முதல் அமைச்சரோ தலை சிறந்த நடிகரின் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சிவாஜி கணேசன் தனது திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார். எனவே இந்த விழாவை சிறிய நிகழ்ச்சியாக நடத்துவது எங்கள் தந்தையை அவமரியாதை செய்யும் விதமாகவே இருக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்து முதல்-அமைச்சரும் அரசு அதிகாரிகளும் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது எங்கள் குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோள் ஆகும். நல்ல பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும், நடிகருமான வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் திலகம் சிவாஜியின் மணி மண்டபத்தை 1-ந்தேதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார், என்று அறிவிக்கப்பட்டு இருப்பது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் திலகத்தின் மாண்புக்கு இழுக்கு சேர்க்கும் செயலில் ஈடுபட்டுள்ள முதல்- அமைச்சருக்கு, திரையுலகினர் எதிர்ப்பு தெரித்து, முதல்-அமைச்சர் திறந்து வைத்தால் மட்டுமே விழாவுக்கு வருவோம் என்று திரையுலகினர் அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழக திரையுலகமும் நடிகர் திலகத்திற்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராகத் திரண்டு எழவேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, September 28, 2017

ஜெயலலிதாவின் அப்போலோ வீடியோவும்... விடைதெரியா சரச்சைகளும்!

அ.சையது அபுதாஹிர்
vikatan



ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் எந்த வீடியோவும் எடுக்கப்படவில்லை. அவர் சிகிச்சை பெற்ற அறையிலும் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை” என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்து பத்து மாதங்கள் கழித்து இப்போது வீடியோ வடிவில் அவர் மரணம் குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரண்டு தினங்களிலே அவர் வீட்டிற்கு அனுப்படுவார் என்ற சொல்லபட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான படங்கள் குறித்த பேச்சு அப்போது எழவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஜெயலலிதாவின் நிலை என்ன என்று பலதரப்பிலும் கேள்வி எழுந்தது. ஆளுநர், ராகுல் காந்தி, என பலரும் மருத்துவமனைக்கு வந்தாலும் ஜெயலலிதாவினை பார்க்க முடியாத நிலை இருந்தது. அப்போதுதான் ஜெயலலிதாவின் புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அப்போது அதைபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை சசிகலா குடும்பத்தினர்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரவு நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் சிசிடிவி.கேமராக்களும் செயல் இழக்க செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. அதேநேரம் அ.தி.முக. வின் செய்தித்தொடர்பாளர்கள் அனைவருமே ஜெயலலிதா உண்கிறார் உறங்கினார் இட்லி சாப்பிட்டார் என்பதாக முரண்பாடான பேட்டிகளை அளித்துவந்தனர். ஜெயலலிதா மரணம் வரை நீரு பூத்த நெருப்பாக இருந்த இந்த விவகாரம் அவர் மரணத்திற்கு பிறகு உசச்திற்கு சென்றது. குறிப்பாக பி.ஹெச்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசினார். பன்னீர் தீடீர் என சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கியபோதுதான் யாரையும் ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை என்று கூறி அதிரவைத்தார்.

அப்போதும் தமிழக அமைச்சர்கள் அமைதியாகவே இருந்தார்கள். ஆனால், பத்து மாதம் கழித்து இப்போது திண்டுக்கல் சீனிவாசன் “யாருமே ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. இட்லி சாப்பிடுகிறார் என்று சொன்னதெல்லாம் பொய்” என்று போட்டு உடைக்க, ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.



ஜெயலலிதாவின் வீடியோ தங்களிடம் இருக்கிறது எனவும் அதை தக்கநேரத்தில் வெளியிடுவோம் என்றும் முதலில் சொன்னது திவாகரன் மகன் ஜெய்ஆனந்த். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரச்சை வெளியான ஆரம்பத்தில் இதை தெரிவித்தார். பன்னீர்செல்வத்தின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் ஆன்ந்த் இந்த பதிலை தெரிவித்தார். அதன்பிறகு ஜெயலலிதா பற்றி வீடியோ விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்த பிறகு இப்போது வில்லங்கமாகி வருகிறது.

தினகரன் “ஜெயலலிதா டி.வி. பார்க்கும் காட்சியை சின்னம்மா வீடியோவாக எடுத்துள்ளார். அதை விசாரணை ஆணையத்திடம் கொடுப்போம்” என்று சொல்லியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக அப்போலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி“ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிரா ஏதும் பொறுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

உண்மையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வீடியோ எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு முழுமையான விடை இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அந்த அறைக்குள் சென்று வரும் உரிமை சசிகலாவிற்கு மட்டுமே இருந்தது. ஜெயலலிதா இருந்த அறையின் அருகே இரண்டு சோபாக்கள் போடப்பட்டு இருந்தன. ஒரு டீபாய் ஒன்றும் இருந்துள்ளது. சசிகலா மருத்துவமனையிலேயே இருந்த நேரத்தில் அவர் கையில் இரண்டு செல்போன்களும், ஒரு டேப்லட்டும் இருந்துள்ளது. சசிகலா அதில் ஜெயலலிதாவை வீடியோ எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் மருத்துமவனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு ஒருமாதத்தில் அவர் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் இருந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தரப்பிலிருந்தே சொல்லபட்டது. இதுகுறித்து சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது “ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சில படங்கள் எடுக்கப்பட்டது உண்மை. அது சசிகலா குடும்பத்தில் உள்ள முக்கியமான ஒருவரிடம் உள்ளது. சசிகலாவின் ஐபோனில்தான் இந்த படங்கள் எடுக்கபட்டது” என்று சொல்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. விசாரணை ஆணையமாவது இதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

Two Telugu medical students drown in Ukraine, trying to save a friend

JBS Umanadh, DH News Service, Hyderabad, Sep 20 2017, 11:55 IST
File Photo of Sivakanth Reddy and the Zaporizhzhia State Medical university campus
File Photo of Sivakanth Reddy and the Zaporizhzhia State Medical university campus

Two Telugu students studying MBBS at the Zaporizhzhia State Medical University in Ukraine drowned to death on Monday while trying to save another friend. 

According to reports reaching here MBBS final year students Sivakanth Reddy of Kuntlur here and Ashok of BN Reddy colony a native of Kadapa in Andhra Pradesh died saving another student Mukesh who accidentally dragged by the waves while playing beach volleyball. 

It is said that four Indian students were playing the game on the shores at the time of the tragedy.

According to close relatives of Reddy, he returned to Ukraine on 2 of this month after holidays to finish his course and earn his degree.

“Actually he would have completed his course within six months. We were told on Tuesday that he is no more while his friend Ashok died at the hospital undergoing treatment,” a cousin of Reddy told in a TV interview. He said that the boy’s father who is a heart patient is unaware of the death and he was made to believe that his son met with an accident and his condition is critical.

It has been common practice for Telugu students to go to distant places in search of medical education. Ukraine, Georgia, Philippines and West Indies are the prominent places where Telugu students obtain MBBS degrees. Several educational consultants are involved in securing admission in these foreign educational institutions, who charge a premium for their services.
தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???



7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் 7 வது ஊதியக்குழு அறிக்கையை ஊதியக்குழு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாக முன்கூட்டியே தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் 22.09.2017 அன்று ஜாக்டோ-ஜியோ வழக்கின் போது 30.09.2017 ல் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு நிதி நெருக்கடி காரணமாக 5 மாதங்கள் அமுல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என கேட்டது....

உயர்நீதிமன்றம் அதனை மறுத்து வரும் அக்டோபர் 13 ம் தேதிக்குள் 7 ஆவது ஊதியக்குழு தொடர்பான தனது இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் இதை தமிழக அரசு செய்யாவிட்டால் அக்டோபர் 23 ல் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை பிறப்பிக்கும், என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே அரசு தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக 7ஆவது ஊதியக்குழு அமல்படுத்தும் நாள் அல்லது அதற்கு மாற்றாக இடைக்கால நிவாரணம் 20% வழங்கும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் எனும் நிலையில் உள்ளது.

அதற்கு முன்னதாக அரசுக்கு ஊதியக்குழு தொடர்பான முடிவெடுக்க போதிய கால அவகாசம் அளிக்கும் விதமாக,குழு தனது அறிக்கையை 27.09.2017 அன்றே சமர்ப்பித்திருப்பது அரசு ஊழியர்,ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...
ஓய்வூதியம் தொடர்பாக 7 அம்ச கோரிக்கைகள்..! மூத்த குடிமக்களின் தீர்மானம் நிறைவேற்றம்

தி.ஜெயப்பிரகாஷ்




ஓய்வூதியம் தொடர்பான 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இன்று, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பின் மாநிலப் பொறுப்பாளர்களைத் தேர்வுசெய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டமைப்பினர், 'தமிழக அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியப் பயன்களைத் திருத்தி அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூபாய் 9,000 நிர்ணயிக்க வேண்டும். மாத மருத்துவப்படியாக ரூபாய் 1000 வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மேலும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...