Saturday, June 29, 2019

Shops encroach upon KK Nagar road, reduce it to half the width
Commuters Suffer As Civic Body Sits On Eviction Process


Shruti.Suresh@timesgroup.com

Chennai:29.06.2019

PV Rajamannar Salai in KK Nagar has at least 14 shops encroaching upon its 80ft wide carriageway, reducing it to just half its width. The road is a vital link for residents of KK Nagar and Ashok Nagar to areas along Arcot Road, and groans under choking traffic during peak hours.

“Instead of going all the way to Vadapalani signal and inching through the traffic on Arcot Road, several people enter Rajamannar Salai from Jawaharlal Nehru Salai (to reach Virugambakkam, Saligramam, Valasaravakkam and surroundings). Corporation is sitting on its plan to evict these people instead of removing the encroachments,” said V Gopalakrishnan, a civic activist from K K Nagar.

Gopalakrishnan added that there were more than eight structures encroaching upon MGR Canal along Ramaswamy Salai, the road parallel to Rajamannar Salai. “These structures, which include a few houses, let out sewage into the canal but no action has been taken by the corporation despite complaints,” he said.

“Rajamannar Salai’s original width was more than 100ft. It is clearly visible how much space the shops have taken. If the corporation clears encroachments, traffic flow can become better,” said another resident of the area.

In 2016, the city corporation wrote to the Tamil Nadu Slum Clearance Board, urging it to allot alternate shop floors to the encroaching vendors so the civic body can pull down the structures.

TOI accessed the letters, addressed to the managing director, TNSCB, seeking to relocate the encroachments (then 12 commercial establishments) along Rajamannar Salai and the adjacent Ramaswamy Salai (six commercial and residential structures).

While civic body officials from ward 131 tried to dismiss it saying they were awaiting allocation orders from TNSCB, a senior TNSCB official said based on the corporation’s request, eligible encroachers had been identified for alternate settlement.

“We identified14 encroaching shops on Rajamannar Salai. We have written at least three letters to the corporation saying that10 of the14 vendors are eligible for resettlement, and that allotment orders are ready. The civic body could have gone ahead with the eviction process,” said a TNSCB official. Officials from the zone later said there was a recent discussion on the issue and that the eviction process will be started. “We will register biometrics to identify the vendors and hand over allotment orders,” said an official.


NO FREE FLOW: Traffic swamps Rajamannar Salai during peak hours
At city GH, treatment is free, not drinking water
Shwetha Ramesh & Anjani Sharma TNN

Chennai:29.06.2019

“Take another helping of rice if you like but there is no drinking water,” the health care worker screamed while serving lunch to patients in a ward of the Rajiv Gandhi Government General Hospital.

The city’s premier hospital does not provide drinking water to its patients or those accompanying them. “Patients have been asked to take water from a tank outside the hospital or buy Rs 10 bottles of water from Amma Unuvagam,” said Sankaran S, a daily wage worker, whose wife has been admitted to the women’s ward.

Health workers said the hospital is water-starved. “We don’t have it flowing in the toilets all through the day. Sometimes, when the taps run dry, we fill water in large drums so patients can flush. It’s not just patients and their family, staff working here do not have drinking water. Most of us bring water bottles from home,” said a member of the staff.

The attendants, who wait at the lounge that has no airconditioning, fan or windows, say summer has never been cruel. “We came here as we cannot afford treatment at a private hospital. While treatment here is free, we have been spending lots of money for food and water,” said R Rajender, whose relative is being treated. The water that comes in pipes doesn’t taste like drinking water and it smells bad.

On an average, a family of two spends at least ₹200 on drinking water daily. “In addition, we spend about ₹300 on food,” said Mary Arulkumar whose brother is admitted to the cardiology block.

Canteen managers at the hospital said water bottles have sold more than the proverbial hot cake in the past three months. But senior hospital administrators said the hospital has an RO plant where drinking water is available all the time.

“But many people complain that they don’t like the smell and taste of this water. They prefer to buy bottles. We also have about five tanks of 5,000 litre capacity,” said dean Dr R Jayanthi. “They buy bottle because they want to not because water isn’t available,” she said.


GETTING REPLENISHED: A tanker fills a plastic tank on the premises of the Rajiv Gandhi Government General Hospital

Friday, June 28, 2019

அழைக்கிறார் அத்தி வரதர்: காஞ்சி செல்பவர்கள் அறிய வேண்டிய 15 தகவல்கள்!

Published on : 27th June 2019 12:21 PM



நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்தி வரதர் வைபவம்' வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.


அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வரதரைத் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்!

1. குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்தி வரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல் நாளே அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாள்கள் கழித்து அத்தி வரதரைத் தரிசிக்கத் திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

2. 48 நாள்களிலும் அத்தி வரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். வேறு எந்த சிறப்புப் பூஜையும் நடைபெறாது.

3. காலை 6 முதல் 2 மணி வரை, பிற்பகல் 3 முதல் 8 மணி வரை எனத் தரிசனத்துக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

4. அத்தி வரதர் தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்தி வரதரைத் தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.

5. பொது தரிசனம், சிறப்புத் தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்புத் தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாகத் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6. ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சன்னிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரைத் தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

7. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

8. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைத்திருக்கிறார்கள். மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதி பள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

அபூர்வ அத்தி வரதர் எதற்காகக் குளத்தில் வைக்கப்பட்டுள்ளார்? என்பதை விடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்..

10. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்திற்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

11. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22 தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு இயந்திரங்களும், வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 6 புதிய சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

12. குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலமாகக் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

13. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும், கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. அத்தி வரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். உணவின் மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்யப்படும். அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சுமார் 300 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அந்த உணவகங்களிலிருந்து வரும் உணவுகள் தினமும் பரிசோதனை செய்யப்படும்.

15. பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களைத் திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கொடுமையின் அடித்தளம் மதுப்பழக்கம்!

By எஸ். பரமசிவம் | Published on : 28th June 2019 01:26 AM |

இளைஞர்கள் போதை விருந்துக்கு அடிமையாகி, இளம் பெண்களை பாதிப்புக்குள்ளாக்கும் அவல நிலை பொள்ளாச்சியில் அண்மையில் அரங்கேறியதைக் கண்டு வருந்தாத உள்ளங்கள் எந்த இல்லங்களிலும் இல்லை என்றே கூறலாம்.

போதையின் விளைவை 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரி முதல்வர் தன் மாணவர்களிடம் சொன்ன குட்டிக் கதை குறிப்பிடத்தக்கது.
ஒரு திருடர், கொலைகாரர், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர், மதுப்பழக்கம் உடையவர்-இவர்களில் மிகவும் மோசமானவர் யார்? என்ற கேள்விக்கு, கொலைகாரர் என்று மாணவர்கள் பதிலுரைக்க, அதனை மறுத்த கல்லூரி முதல்வர், மதுப்பழக்கம் உடையவர்தான் மிகவும் மோசமானவர் என்று பதிலளித்தார்.

குடிப்பதற்கு பணம் இல்லாத மதுப்பழக்கம் உடையவர் திருட ஆரம்பித்து திருடனாகிறார். திருடிய பணத்தைக் கொண்டு மது அருந்துகிறார். மது விருந்தின் போதை மயக்கத்தில் பெண்ணை பலாத்காரம் செய்கிறார். அந்தப் பெண் மற்றவர்களிடம் தெரிவித்துவிடுவார் என்ற அச்சத்தில் அந்தப் பெண்ணைக் கொலை செய்கிறார். இந்தக் கதையைக் கேட்ட மாணவர்கள் மதுப்பழக்கம் உடையவர்தான் மிகவும் மோசமானவர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். 

ஒழுக்கநெறி சார்ந்த கல்வி முறை இன்று கானல் நீராகிவிட்டது என்பது கசப்பான உண்மை. அறிவின் பிறப்பிடம் கல்வி. கல்வி அறியாமை அகற்றும் விளக்கு. அப்போதிருந்த ஆசிரியர்களின் நீதிக் கதைகளின் அற்புதத்தை நாம் உணர முடிந்தது. 

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
என்றார் திருவள்ளுவர். நாணம் எனும் பெண் மதுப்பழக்கம் உடையவர் முன் நிற்க மாட்டார். மதுபானம் நம் அறிவை மயக்குகிறது என்று இயம்புகிறது மணிமேகலை. அதாவது,
மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
அதாவது, மாலுமி இல்லாத மரக்கலம்போல் நம் வாழ்க்கை நெறி கெட்டு அழியும். 

கல்லூரியில் படிக்கும் ஒரு சில செல்வந்தர்களின் மகன்கள் மதுப்பழகத்துக்கு அடிமையாகி படிப்பில் தோல்வியைத் தழுவுகின்றனர்.
வாரிசுகளின் தோல்வியை செல்வந்தர்களும் கண்டுகொள்வதில்லை. அவர்களின் வாரிசுகள் வேலைக்குச் செல்லவேண்டிய அவசியமும் இல்லை.
மிகப் பெரிய செல்வந்தர்களின் வாரிசுகளுக்கு வேலையில்லை என்ற காரணத்துக்காக பெண் கொடுக்க எவரும் முன்வருவதில்லை. இத்தகைய சூழலில், அவர்கள் இளம் பெண்களுடன் பழகி அவர்களைக் காதலிப்பதுபோல் ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுகின்றனர். 

50 ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போதைய தலைவர்கள் மதுவின் தீமையை நன்கு உணர்ந்து, மதுவிலக்கை அமல்படுத்தியிருந்தனர். ஆனால், இப்போது மதுவிலக்கு அமலில் இல்லை. இதனால், மதுப்பழக்கத்துக்கு இளைஞர்கள் எளிதாக அடிமையாகி விடுகின்றனர். 

மகாத்மா காந்தியும் மதுவிலக்கை வற்புறுத்தினார். ஆங்கிலேயன் செய்த தவறை நாமும் செய்யக்கூடாது என்று உணர்த்தினார் மகாத்மா காந்தி. ஆனால் மதுவிலக்கை அமல்படுத்த அரசு தவறிவிட்டது வருந்தத்தக்கது.
சங்க காலத்தில் குடிமக்கள் சில அறப் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குடும்பமும் நாட்டு நலமே குடும்ப நலம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். நல்ல குடும்பத்தை, மக்களை ஈன்று அவர்களை நலமாக வளர்ப்பது தாயின் கடமை என்றார் புலவர் பொன்முடியார். நற்பண்பு, நல்லொழுக்கங்களைப் பயிற்றுவித்து சான்றோர் ஆக்குவது தந்தையின் கடமையாகும் என்றும் கூறியுள்ளார்.

குடும்பம் என்ற கோயிலின் கோபுரம் தாய். தாயின் அறிவுறுத்தலின்படி ஒழுக்கத்திலிருந்து தவறக் கூடாது. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று உடுமலை நாராயண கவி பாடியுள்ளார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்கள் விடுதலை குறித்து ஆணுக்குப் பெண் நிகர் என்று பாடியுள்ளார் மகாகவி பாரதி. தாய்-தந்தையிடம் ஆலோசிக்காமல் முன்பின் தெரியாத ஆண் இருக்கும் இடத்துக்குச் செல்வதை மகாகவி பாரதி நியாயப்படுத்தவில்லை. ஓர் ஆண் நல்லவரா, கெட்டவரா, எந்த நோக்கத்துக்காக நம்மிடம் பழகுகிறார் என ஆராய்ந்து முடிவு எடுப்பது பெண்களின் கடமையாகும். ஆனால், இனக் கவர்ச்சி காரணமாக எது குறித்தும் சிந்திக்காமல் இன்றைய ஆண்கள், பெண்களில் பெரும்பாலானோர் காதல் வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
எனவே, எத்தகைய சூழ்நிலையிலும் இளைஞர்களும் இளம் பெண்களும் தவறு செய்யக்கூடாது. மேலும், படித்து முடித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதபோது, அவர்களது மன நிலை எப்படியும் வாழலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. 

மேலும், இன்றைய திரைப்படங்களில் புகை பிடித்தல்-மது அருந்தும் காட்சிகள் திரையிடப்படும்போது, புகை பிடித்தல், மதுப் பழக்கம் உடல் நலனுக்கு தீங்கு என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதால் மட்டும் பலன் இல்லை. மாறாக, புகை பிடித்தல்-மது அருந்தும் காட்சிகளை தணிக்கை குழு மூலம் சமுதாய பொறுப்புணர்ந்து தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தவிர்ப்பது மிகமிக அவசியம்.

எனவே, இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுப்பது அவசியம். இவ்வாறு அரசு செய்யும் நிலையில் பாலியல் கொடுமைகள் தவிர்க்கப்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும்.
விமானம் தாமதம் பயணியர் அவதி

Added : ஜூன் 28, 2019 01:42

சென்னை, லண்டனில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய, 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம் தாமதமானதால், லண்டன் செல்ல வேண்டிய பயணியர் அவதிக்குள்ளாயினர்.

சென்னையில் இருந்து நேற்று அதிகாலை, 5: 30 மணிக்கு, லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், பயணம் செய்ய, 206 பேர், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், லண்டன் நகரில் மோசமான வானிலை நிலவியதால், லண்டனில் இருந்து, சென்னைக்கு வர வேண்டிய விமானம், குறித்த நேரத்தில் வரவில்லை. இதனால், அந்த பயணியர் அனைவரும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். லண்டனில் வானிலை சீரடைந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நள்ளிரவு 12:30 மணிக்கு சென்னை வந்து, இன்று அதிகாலை, 2:30 மணிக்கு 206 பயணியரும், லண்டன் புறப்பட்டுச் சென்றது.
சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு மூடுவிழா? டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக மாற்றம்

Added : ஜூன் 27, 2019 22:59  dinamalar

சிவகங்கை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் புற்றுநோய் உட்பட பல துறை நிபுணர்கள் மதுரை, புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இங்குள்ள துறைகள் மூடப்படும் என புகார் எழுந்துள்ளது.

சிவகங்கையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லுாரி துவக்கப்பட்டது. தினமும் 1,200 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை, மாதத்திற்கு 320 பிரசவம் நடக்கிறது. கல்லுாரி துவக்கிய போது இதயம், சிறுநீரகம், நரம்பியல், புற்றுநோய் துறைகளுக்கு சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தினர்.மூடுவிழா காணும் துறைகள்இந்நிலையில் சிறப்பு பிரிவு டாக்டர்கள் மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றம் செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக புற்றுநோய் பிரிவில் ஒட்டுமொத்தமாக ஆறு டாக்டர்களையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி சிறப்பு பிரிவுகள் மூடுவிழாவை நோக்கி செல்கின்றன.

அமைச்சர் செல்வாக்கு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இதனால் சிவகங்கை கல்லுாரியில் இருந்து சிறப்பு நிபுணர்களை தனது மாவட்டத்திற்கு மாற்றி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிவகங்கை தொகுதியில் வென்று அமைச்சரான பாஸ்கரனுக்கு இந்த 'மூடுவிழா' பிரச்னை தெரியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்தங்கிய பகுதியான சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லுாரி மூடுவிழாவை நோக்கி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
35 ஆண்டுகள், 'அரியர்' உள்ளதா? பட்டம் பெற அழைக்குது பல்கலை

Added : ஜூன் 28, 2019 01:47

சென்னை, சென்னை பல்கலையில், 1980 முதல் படித்தவர்களுக்கு, 'அரியர்' இருந்தால், தேர்வு எழுதி பட்டம் பெற, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலையின் பதிவாளர் மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 1980 - 81 முதல், 2014 - 15ம் கல்வி ஆண்டு வரை, முதுநிலை பட்டம் படித்தவர்களும், 1980 - 81 முதல், 2013 - 14ம் கல்வி ஆண்டு வரை, இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்தவர்களும், அரியர் வைத்திருந்தால், மீண்டும் தேர்வு எழுதி பட்டம் பெற சலுகை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மற்றும், 2020 மே மாதங்களில், இதற்கான தேர்வில் பங்கேற்கலாம். இந்த திட்டத்தில் தேர்வு எழுதுவோர், தேர்வு கட்டணத்தை இரண்டு மடங்கு செலுத்த வேண்டும். டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர்ந்தவர்கள், மீண்டும், இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டில், அதே டிப்ளமா படிப்பில் சேரலாம். ஆனால், தற்போதைய பாட திட்டப்படி, தேர்வை எழுத வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, பல்கலையின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 2.5.2024