35 ஆண்டுகள், 'அரியர்' உள்ளதா? பட்டம் பெற அழைக்குது பல்கலை
Added : ஜூன் 28, 2019 01:47
சென்னை, சென்னை பல்கலையில், 1980 முதல் படித்தவர்களுக்கு, 'அரியர்' இருந்தால், தேர்வு எழுதி பட்டம் பெற, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலையின் பதிவாளர் மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 1980 - 81 முதல், 2014 - 15ம் கல்வி ஆண்டு வரை, முதுநிலை பட்டம் படித்தவர்களும், 1980 - 81 முதல், 2013 - 14ம் கல்வி ஆண்டு வரை, இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்தவர்களும், அரியர் வைத்திருந்தால், மீண்டும் தேர்வு எழுதி பட்டம் பெற சலுகை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மற்றும், 2020 மே மாதங்களில், இதற்கான தேர்வில் பங்கேற்கலாம். இந்த திட்டத்தில் தேர்வு எழுதுவோர், தேர்வு கட்டணத்தை இரண்டு மடங்கு செலுத்த வேண்டும். டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர்ந்தவர்கள், மீண்டும், இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டில், அதே டிப்ளமா படிப்பில் சேரலாம். ஆனால், தற்போதைய பாட திட்டப்படி, தேர்வை எழுத வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, பல்கலையின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment