Sunday, June 30, 2019

திருப்பதியில் வாடகை அறை எடுத்துத் தங்குபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

Published on : 29th June 2019 05:58 PM |

திருப்பதியில் ஜூலை 1-ம் தேதி முதல் வாடகை அறை வழங்கும் நடைமுறைகளில் சிறிய மாற்றத்தை தேவஸ்தானம் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாடகை வளாகங்களில் அறை எடுத்துத் தங்கி வருகின்றனர். இந்த வளாகங்களில், தர்ம தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் கவுன்ட்டர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த வாடகை அறைகளை 90 நாள்களுக்கு முன் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அளித்து வந்தது. ஆனால், நேரடியாக வரும் பக்தர்களுக்கு வாடகை அறை வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதால், தேவஸ்தானம் இந்த நடைமுறையில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளது.


திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாசம் வளாகத்தில் உள்ள வாடகை அறைகள், நேரடி முன்பதிவில் மட்டுமே வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் அறை ஒதுக்கீட்டைப் பெற்ற பின், 24 மணிநேரத்திற்குள் அறையைக் காலி செய்ய வேண்டும். மேலும் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் மற்றும் மாதவம் உள்ளிட்ட வளாகங்களில் உள்ள வாடகை அறைகள் இணையதள முன்பதிவு மூலம் மட்டுமே வழங்கப்பட உள்ளன.

இணையதளம் வாயிலாக வாடகை அறை முன்பதிவு செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு வரத் தவறினாலும், முன்பதிவில் குறிப்பிட்டுள்ள 24 மணி நேரத்திற்குள் அறையைக் காலி செய்ய வேண்டும். அவர்களுக்கு நேர நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இந்த மாற்றம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...