Saturday, June 29, 2019

இயற்கை மருத்துவ படிப்பு ஜூலை 1 முதல் விண்ணப்பம்

Added : ஜூன் 28, 2019 23:09

சென்னை, 'யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்' என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை - அரும்பாக்கம், நெல்லை, திருமங்கலம், கோட்டாறு ஆகிய பகுதிகளில் ஆறு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.இதில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு 390 இடங்கள் உள்ளன. இதேபோல் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 1200 இடங்கள் உள்ளன.

இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் மற்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெற உள்ளன.இந்நிலையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஜூலை 1 முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஜூலை 1 முதல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது. விண்ணப்பங்களை www.tnhealth.org www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.மற்ற நான்கு படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பதால் விண்ணப்ப வினியோகம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024