Friday, June 28, 2019

விமானம் தாமதம் பயணியர் அவதி

Added : ஜூன் 28, 2019 01:42

சென்னை, லண்டனில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய, 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம் தாமதமானதால், லண்டன் செல்ல வேண்டிய பயணியர் அவதிக்குள்ளாயினர்.

சென்னையில் இருந்து நேற்று அதிகாலை, 5: 30 மணிக்கு, லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், பயணம் செய்ய, 206 பேர், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், லண்டன் நகரில் மோசமான வானிலை நிலவியதால், லண்டனில் இருந்து, சென்னைக்கு வர வேண்டிய விமானம், குறித்த நேரத்தில் வரவில்லை. இதனால், அந்த பயணியர் அனைவரும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். லண்டனில் வானிலை சீரடைந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நள்ளிரவு 12:30 மணிக்கு சென்னை வந்து, இன்று அதிகாலை, 2:30 மணிக்கு 206 பயணியரும், லண்டன் புறப்பட்டுச் சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024