Thursday, June 27, 2019


திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்

Added : ஜூன் 27, 2019 01:54

சென்னை, ரயில்களில் பயணியர் நெருக்கடியை தவிர்க்க, சென்னை, எழும்பூரில் இருந்து, திருநெல்வேலிக்கு, எட்டு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

இந்த ரயில்கள், எழும்பூரில் இருந்து, ஜூலை, 5, 12, 19 மற்றும், 26, மாலை, 6:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள், காலை, 6:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து, ஜூலை, 7, 14, 21, மற்றும், 28ல், மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:15 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். 

இந்த ரயிலில், 'ஏசி' இரண்டடுக்கு பெட்டி ஒன்று, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி மூன்று, இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி பெட்டிகள், 12 இணைக்கப்படும். தாம்பரம், விழுப்புரம் உட்பட, 10 நிலைங்களில் மட்டும் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு துவங்கிவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024