Friday, June 28, 2019

சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு மூடுவிழா? டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக மாற்றம்

Added : ஜூன் 27, 2019 22:59  dinamalar

சிவகங்கை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் புற்றுநோய் உட்பட பல துறை நிபுணர்கள் மதுரை, புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இங்குள்ள துறைகள் மூடப்படும் என புகார் எழுந்துள்ளது.

சிவகங்கையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லுாரி துவக்கப்பட்டது. தினமும் 1,200 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை, மாதத்திற்கு 320 பிரசவம் நடக்கிறது. கல்லுாரி துவக்கிய போது இதயம், சிறுநீரகம், நரம்பியல், புற்றுநோய் துறைகளுக்கு சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தினர்.மூடுவிழா காணும் துறைகள்இந்நிலையில் சிறப்பு பிரிவு டாக்டர்கள் மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றம் செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக புற்றுநோய் பிரிவில் ஒட்டுமொத்தமாக ஆறு டாக்டர்களையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி சிறப்பு பிரிவுகள் மூடுவிழாவை நோக்கி செல்கின்றன.

அமைச்சர் செல்வாக்கு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இதனால் சிவகங்கை கல்லுாரியில் இருந்து சிறப்பு நிபுணர்களை தனது மாவட்டத்திற்கு மாற்றி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிவகங்கை தொகுதியில் வென்று அமைச்சரான பாஸ்கரனுக்கு இந்த 'மூடுவிழா' பிரச்னை தெரியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்தங்கிய பகுதியான சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லுாரி மூடுவிழாவை நோக்கி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024