டாக்டர்கள் மீதான மதிப்பு குறைந்து வருகிறது ஹிமாச்சல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
Added : ஜூன் 30, 2019 00:21
சென்னை, ''டாக்டர்கள் மீது, நோயாளிகள் கொண்டிருக்கும் மதிப்பு குறைந்து வருகிறது. டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இந்த உண்மையை உணர்த்துகின்றன,'' என, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராமசுப்பிரமணியன் பேசினார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 31வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு அரங்கில், நேற்று நடந்தது. சிறப்பு விருதுகள்இதில், தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பட்டப் படிப்பைநிறைவு செய்த, 22 ஆயிரத்து, 929 மாணவர்களுக்கு, பட்டங்கள்வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சிறப்பு விருதுகள் பெற்ற, 139 மாணவர்களை, கவர்னர் கவுரவித்தார்.பட்டமளிப்பு விழாவில், 4,745 மாணவர்கள் பங்கேற்றனர். கிண்டியில் உள்ள, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், தற்காலிக அரங்குகள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், இணையவழி நேரலை வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர்.விழாவில், நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
மேற்கத்திய மருத்துவ முறைகளுக்கு முன்னோடியாக, இந்திய மருத்துவம் இருந்திருக்கிறது என்பதை, பல்வேறு நுால்களின் வாயிலாகவும், தரவுகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும்.திப்பு சுல்தானால், கைகளும், மூக்கும் அறுக்கப்பட்ட ஒருவருக்கு, 1792ம் ஆண்டிலேயே ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடவடிக்கைசின்னம்மைக்கான தடுப்பூசியை, அமெரிக்கா டாக்டர் எட்வர்ட் ஜென்னர்கண்டறிவதற்கு முன்னோடியாக, நம் மூதாதையர் இருந்திருக்கின்றனர்.முன்பெல்லாம், நோயாளியின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனையை வைத்தே, அவருக்குள்ள நோயை, நம் டாக்டர்கள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இன்றைக்கு அத்தகைய உள்ளுணர்வு சார்ந்து, பணியாற்றக்கூடிய டாக்டர்கள் இல்லை. மாறாக, மருத்துவ உபகரணங்களையே, அவர்கள் நம்புகின்றனர்.டாக்டர்கள் மீது, நோயாளிகள் கொண்டிருக்கும் மதிப்பு குறைந்து வருகிறது. இயற்கையின் நியதியை தாண்டி, டாக்டர்கள் மாயாஜாலம் புரிய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்; யதார்த்தத்தை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். நாட்டின் பல இடங்களில், டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும், இந்த உண்மையை உணர்த்துகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.மருத்துவ பல்கலையின் துணை வேந்தர், சுதா சேஷய்யன் பேசுகையில், ''தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கு, ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிப்பதோடு, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்,'' என்றார்.விழாவில், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, மருத்துவ பல்கலை பதிவாளர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment