Monday, June 24, 2019

தீபாவளி : ரயில் பயண முன்பதிவு இன்று தொடக்கம்

By DIN | Published on : 24th June 2019 05:09 AM |

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அக்டோபர் 22-ஆம் தேதிக்கான பயண சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஜூன் 24) நடைபெறவுள்ளது.

சென்னையில் வேலை, தொழில், வியாபாரம், படிப்பு போன்ற காரணங்களால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பலர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கோயில் திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதிலும், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு ஓரிரு நாளில் விறுவிறுப்படையவுள்ளது. ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்னரே பதிவு செய்யும் முறை உள்ளது. அதன்படி, அக்டோபர் 22-ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஜூன் 24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 23-ஆம் தேதி பயணம் செய்ய முன்பதிவுக்கு ஜூன் 25-ஆம் தேதியும், அக்டோபர் 24-ஆம் தேதிக்கு பயண சீட்டு எடுக்க ஜூன் 26-ஆம் தேதியும், அக்டோபர் 25-ஆம் தேதி பயணம் செய்ய முன்பதிவுக்கு ஜூன் 27-ஆம் தேதியும், அக்டோபர் 26-ஆம் தேதி பயணம் செய்ய ஜூன் 28-ஆம் தேதியும் முன்பதிவு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024