Saturday, June 29, 2019

மாற்ற முடியாத பல கோடிகள் தவிக்கிறது கோயில் நிர்வாகங்கள்

Added : ஜூன் 28, 2019 23:40

ஸ்ரீவில்லிபுத்துார் தமிழக கோயில் உண்டியல்களில் கிடைத்த பழைய ரூ.500 மற்றும் ரூ.ஆயிரம் நோட்டுகளை மாற்ற முடியாமல் பலகோடி முடங்கி கிடக்கிறது.தமிழகத்தில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. வருட வருமானம்ரூ. 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உள்ள கோயில்கள் கிரேடு 4, ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கிரேடு 3, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கிரேடு 2 நிலையிலும், ரூ. 25 முதல் ரூ.50 லட்சம் வரை கிரேடு 1, ரூ.50 லட்சத்திற்கு மேல் ரூ.75 லட்சம் வரை உதவி ஆணையர் நிலையிலும், அதற்கு மேல் கோயில்கள் இணை ஆணையர் நிலையிலும் நிர்வகிக்கபட்டு வருகிறது.2017 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத நோட்டுகளான ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உண்டியல்களில் போடப்பட்டு ஒவ்வொரு கோயிலிலும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சில லட்சங்கள் வரை உள்ளது. 38 ஆயிரம் கோயில்களிலுமாக பலகோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் உள்ளது.டிசம்பர் 2017க்குப்பின் அனைத்து கோயில்களிலும் வந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு என்ற விபரம் சேகரிக்கபட்டு அதை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி வழி செய்யவேண்டுமென அறநிலையத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.18 மாதங்களை கடந்தும் ரிசர்வ் வங்கி எந்த பதிலும் வழங்கவில்லை. இந்த பல கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை மாற்றமுடியாமல் அறநிலையத்துறை தவிக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024