எம்.ஜி.ஆர்., பல்கலையில் 29ல் பட்டமளிப்பு விழா
Added : ஜூன் 27, 2019 01:46
சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 31வது பட்டமளிப்பு விழா, 29ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 31வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலையின், நுாற்றாண்டு விழா அரங்கில், 29ல் நடைபெற உள்ளது.
இந்த விழாவில், இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், நர்ஸ், மருந்தாளுனர் படிப்புகளை நிறைவு செய்த, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பட்டம் பெற உள்ளனர்.
தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தங்கம் பதக்கம் பெற்ற, 139 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார். சிறப்பு விருந்தினராக, ஹிமாச்சல பிரதேச மாநில, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராமசுப்பிரமணியன் பங்கேற்கிறார்.
No comments:
Post a Comment