Thursday, June 27, 2019


சாட்சி சொல்ல ரஷ்ய பெண் வருவாரா?'

Added : ஜூன் 26, 2019 23:44

சென்னை, 'பாலியல் வன்முறைக்கு ஆளான, ரஷ்ய பெண், சாட்சியம் அளிக்க, இந்தியா வருவாரா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.ஆன்மிக பயணமாக, திருவண்ணாமலைக்கு, ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெண் வந்திருந்தார். விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவரை, விடுதியின் நிர்வாகி பாரதி மற்றும் சிலர், பாலியல் பலாத்காரம் செய்தனர். திருவண்ணாமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாரதி மற்றும் அவரது சகோதரர் நீலகண்டன் உள்ளிட்ட சிலரை, கைது செய்தனர்.கடந்த, 2018 ஜூலை மாதம், இந்த கொடூரம் நடந்தது. இவ்வழக்கில் ஜாமின் கோரி, நீலகண்டன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கண்ணதாசன், ''திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ரஷ்ய பெண் சாட்சியம் அளித்தார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை,'' என்றார்.போலீஸ் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராகவன், ''ரஷ்ய பெண், இந்தியாவில் இல்லை; அவர், ரஷ்யா சென்று விட்டார். அவரது சாட்சியம், இன்னும் முழுமை அடையவில்லை,'' என்றார்.''சாட்சியம் அளிக்க, அந்த பெண், இந்தியா வருவாரா; வர எத்தனை நாட்கள் ஆகும்; நேரில் ஆஜராக, எப்படி, 'சம்மன்' அனுப்புவது,'' என, நீதிபதி வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.இதுகுறித்து, விரிவான பதில் மனுவை, போலீஸ் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024