Saturday, June 29, 2019

ராஜபாளையத்தில் டூவீலர்களுக்கு தீ வைப்பு

Added : ஜூன் 28, 2019 23:11



ராஜபாளையம், ராஜபாளையத்தில் டூ வீலர்களுக்கு வைக்கப்பட்ட தீயால் கடையில் துாங்கிய நால்வர் உயிர் தப்பினர்.ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் நாடார் மேல் நிலைப்பள்ளி அருகே காம்ப்ளக்ஸ் உள்ளது. இதன் ரோட்டின் முன்புற பகுதியில் ஐ.ஓ.பி.,வங்கி உட்பட 15 க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. பிச்சிப்பூ என்பவர் மதுராஜா டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.இங்கு ஸ்ரீவில்லிபுத்துார் விஜயகுமார், ராஜபாளையம் இன்பமணி, சரவணன் , வீர பாண்டி நேற்று முன்திம் இரவு தங்கினர்.நேற்றுஅதிகாலை 3:00 மணிக்கு டிராவல்ஸ் ஷட்டர் வழியே கரும்புகை உள்புக துாங்கிய அனைவரும் மூச்சு திணறினர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து கதவை திறக்க முயற்சி செய்தனர்.வெளியே டூ வீலர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் ஷட்டரை திறக்க முடியாது தவித்தனர் . விடாமுயற்சியில் ஷட்டரை திறந்து வெளியேறினர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நிறுத்தப்பட்டிருந்த மூன்று டூ வீலர்களும் தீயில் கருகியது. உயிர் தப்பிய நால்வரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரித்தனர்.ராஜபாளையத்தில் தொடரும் டூவீலர் தீ வைப்பால் பொது இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024