Saturday, June 29, 2019

நெல்லை, குருவாயூர், உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்

Added : ஜூன் 29, 2019 01:39

சென்னை, திருநெல்வேலி, தஞ்சை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட, 49 ரயில்கள், ஜூலை, 1 முதல், நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வேயின், புதிய ரயில் கால அட்டவணை, ஜூலை, 1 முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும், 49 ரயில்கள், ஐந்து முதல், 25 நிமிடங்கள் வரை, வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள்:* சென்னை, எழும்பூரில் இருந்து, கேரள மாநிலம், குருவாயூருக்கு இயக்கப்படும் ரயில், காலை, 8:15க்கு பதிலாக, 8:25 மணிக்கு இயக்கப்படும். திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், இரவு, 8:10க்கு பதிலாக, இரவு, 7:50 மணிக்கும், தஞ்சை, உழவன் எக்ஸ்பிரஸ் இரவு, 10:40க்கு பதிலாக, 10:55 மணிக்கும், நேரம் மாற்றி இயக்கப்படும்
* எழும்பூரில் இருந்து, இரவு, 11:00க்கு இயக்கப்படும், சேலம் எக்ஸ்பிரஸ், நேரம் மாறப்பட்டு, இரவு, 10:45க்கும், கொல்லம் எக்ஸ்பிரஸ், இரவு, 7:50க்கு பதிலாக, இரவு, 8:10க்கும் இயக்கப்படும்

எழும்பூர் வரும் ரயில்கள்காக்கிநாடா - செங்கல்பட்டு, ராமேஸ்வரம் - மண்டுவாடி, ராமேஸ்வரம் - பைசாபாத், புதுச்சேரி - புதுடில்லி, செங்கல்பட்டு - காச்சிக்குடா ரயில்கள், எழும்பூருக்கு, ஐந்து நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.

மேலும், காச்சிகுடா - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ், 25 நிமிடம்; நிஜாமுதீன் - கன்னியாகுமரி, நிஜாமுதீன் - மதுரை, காரைக்கால் - லோக்மான்யதிலக் ரயில்கள், 10 நிமிடம்; புதுடில்லி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ், 20 நிமிடம் முன்னதாக வரும்.சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, கர்நாடாகா மாநிலம், பெங்களூருவுக்கு இயக்கப்படும், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், காலை, 7:40 மணி; லால்பாக் எக்ஸ்பிரஸ், மாலை, 3:30 மணி; பெங்களூரு மெயில், இரவு, 10:55 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து புறப்படும், திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், நேரம் மாற்றப்பட்டு, மாலை, 3:10 மணி; திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ரயில், மாலை, 3:20; ஆமதாபாத் எக்ஸ்பிரஸ், இரவு, 8:30; தன்பாத் எக்ஸ்பிரஸ், இரவு, 11:05 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024