தனியாரிடம் சிகிச்சை பெற்ற அரசு மருத்துவமனை டீன்
திருச்சி,திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், சாரதா, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக, பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.இந்த, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி டீனாக, டாக்டர் சாரதா நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன், இவருக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அதனால், திருச்சியில் உள்ள, பிரபலமான, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின், விடுமுறையில், சொந்த ஊரான, கோவைக்கு சென்றுள்ளார்.அனைத்து வசதிகளுடன் கூடிய, அரசு மருத்துவனையில், சிறப்பு மருத்துவ பயிற்சி முடித்த, மருத்துவ நிபுணர்கள் உள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment