Saturday, June 29, 2019

நெல்லை, சேலம் உள்பட 43 ரயில்களின் நேரம் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு
By DIN | Published on : 29th June 2019 05:09 AM |



நெல்லை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளளன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை ரயில் இரவு 8.10 மணிக்குப் பதிலாக 7.50 மணிக்குப் புறப்படும். இதேபோன்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும், ரயில் நிலையங்களுக்கு வந்து சேரும் 43 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நேர மாற்றம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.
கொல்லம், நிஜாமுதீன் ரயில்கள்: வெளியூர்களில் இருந்து சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வந்தடையும் 13 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேரும் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டு, 5 நிமிஷம் முன்னதாக அதிகாலை 3.40 மணிக்கு எழும்பூர் வந்து சேரும். கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி காலை 8.10 மணிக்கு வந்து சேரும் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டு, தினசரி காலை 8.20 மணிக்கு வந்து சேரும். 

நிஜாமுதீனில் இருந்து மதுரைக்கு புதன், வெள்ளிக்கிழமை இயக்கப்படும் நிஜாமுதீன் விரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு மாலை 6.05 மணிக்கு வந்துசேரும். இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, 10 நிமிஷம் முன்னதாக மாலை 5.55 மணிக்கு வந்து சேரும். 

இதுபோன்று, நிஜாமுதீனில் இருந்து எழும்பூர் வழியாக கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, எழும்பூருக்கு 10 நிமிஷம் முன்னதாக மாலை 5.55 மணிக்கு வந்து சேரும்.
இதுதவிர, பிற இடங்களில் இருந்து எழும்பூருக்கு வந்து சேரும் 10 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை-நெல்லை, குருவாயூர் ரயில்கள்: சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு தினசரி காலை 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு காலை 8.25 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படவேண்டிய விரைவுரயில் நேரம் மாற்றப்பட்டு, இரவு 8.10 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, இரவு 7.50 மணிக்கு புறப்படும். 

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் உழவன் விரைவுரயில் நேரம் மாற்றப்பட்டு, தினசரி இரவு 10.55 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டு, தினசரி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த நேரம் மாற்றம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் நேரம் மாற்றம்: மேட்டுபாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு தினசரி காலை 5.05 மணிக்கு வந்தடையும் நீலகிரி விரைவு ரயில் 5 நிமிஷம் முன்னதாக காலை 5 மணிக்கு வந்து சேரும். 

திருவனந்தபுரத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி நண்பகல் 12 மணிக்கு வந்து சேரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, காலை 10.15 மணிக்கு வந்துசேரும். இதுதவிர, 4 ரயில்கள் வந்துசேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

புறப்படும் ரயில்கள் நேரம் மாற்றம்: சென்னை சென்ட்ரலில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு தினசரி காலை 7.50 மணிக்கு புறப்படவேண்டிய ரயிலின் நேரம் மாற்றப்பட்டு 10 நிமிஷம் முன்னதாக காலை 7.40 மணிக்கு புறப்படும். இதுதவிர, 9 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...