மருத்துவ படிப்புகளில் சேர 53 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Added : ஜூன் 21, 2019 23:08
சென்னை, எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர 53 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் 3250 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதமான 488 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக மீதி 2752 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன. அரசு கல்லுாரியில் பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.அதேபோல தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 1600க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் 800க்கும் மேற்பட்ட இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் வருகின்றன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை மருத்துவ கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.இதற்கு www.tnhealth.org www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இம்மாதம் 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி அரசு ஒதுக்கீட்டுக்கு 34 ஆயிரத்து 368 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 25 ஆயிரத்து 388 பேர் என 59 ஆயிரத்து 756 பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்தோர் அவற்றின் பிரதிகளை மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்படி நேரடியாகவும் தபால் வாயிலாகவும் 53 ஆயிரத்து 176 பேர் தங்களின் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் பிரதிகளை மருத்துவ கல்வி இயக்கத்திற்கு அனுப்பி உள்ளனர்.இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜன் கூறுகையில் ''விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. 'நீட்' மதிப்பெண் அடிப்படையில் ஜூலை முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்'' என்றார்.

No comments:
Post a Comment