Saturday, June 22, 2019

முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் நீட்டிக்க மறுப்பு

Added : ஜூன் 21, 2019 22:05

புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, கவுன்சிலிங் நடத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.நாட்டில், 1,300க்கும் அதிகமான, பதிவு பெற்ற கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்திய கல்வி மேம்பாட்டு சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்திஉள்ளன.இந்த அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தன்னாட்சி பல்கலைகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 603 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளன. 'இவற்றை நிரப்ப, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, கூறியிருந்தது,.இந்த மனு, நீதிபதிகள், தீபக் குப்தா, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய, விடுமுறை கால அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'கவுன்சிலிங் நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளதா என, தெரியவில்லை. அதனால், கவுன்சிலிங் தேதியை நீட்டித்து உத்தரவிட முடியாது' என, கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024