Saturday, June 22, 2019

'மாணவர் தற்கொலை முடிவுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல!'

Added : ஜூன் 21, 2019 23:43

சென்னை 'மாணவர்களை திருத்துவதற்காக எடுக்கும் நடவடிக்கையால் அவர்கள் தற்கொலை செய்ய நேரிட்டால் அதற்கு ஆசிரியர்களை பொறுப்பாளராக்க கூடாது' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்த வழக்கில் முத்துராஜ் முருகேசன் மற்றும் வேலப்பன் ஆகிய ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கிலிருந்து மூவரையும் விடுவித்து 2005 டிச. 5ல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்ட போலீசார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:தவறான வழியில் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது. அவர்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சில நேரங்களில் கடுமையாகின்றன.இதனால் மனம் உடையும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பொறுப்பாளராக்க கூடாது. எனவே இந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.மேலும் பருவ வயது மாணவர்கள் 17 வயதில் பிளஸ் 2 படித்து 19 வயதில் கல்லுாரி படிப்பில் சேர்வதற்கான துவக்க நிலை. இதற்காக தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும் என்ற மிகப் பெரிய அழுத்தத்தை மாணவர்களுக்கு தற்போதைய கல்வி முறை கொடுக்கிறது.இதனால் தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெறும்போது அதை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் 16 - 19 வயது மாணவர்களுக்கு கல்வியால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உளவியல் ரீதியாக அவர்களை மதிப்பீடு செய்யும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.மேலும் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்காமல் இருக்க மனநல ஆலோசகர்கள் வாயிலாகவும் உளவியல் ரீதியாகவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நன்னடத்தையை பின்பற்றுவதற்கான உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024