எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: மொத்தம் 67,892 பேர் விண்ணப்பிப்பு
By DIN | Published on : 21st June 2019 01:35 AM
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இப்படிப்புகளுக்கு மொத்தம் 67,892 பேர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ம் தேதி தொடங்கியது. www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவ, மாணவிகள் ஆர்வமாக அதற்கு விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் அதற்கான அவகாசம் நிறைவடைந்தது.
இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 38,955 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 28,937 பேரும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 59,632 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றாலும் பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) என்பதால் மேலும் பலர் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, பெருந்துறை கல்லூரியையும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன.
இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிய கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது. அவை அனைத்துக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மொத்தம் உள்ள 3,350 இடங்களுக்கான கலந்தாய்வை நிகழாண்டில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்த உள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து 5 முதல் 12-ஆம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

No comments:
Post a Comment