Monday, April 12, 2021

பணியாளர் தேர்வு குளறுபடி அதிகாரிகள் மீது நடவடிக்கை?

பணியாளர் தேர்வு குளறுபடி அதிகாரிகள் மீது நடவடிக்கை?

Added : ஏப் 11, 2021 23:44

சென்னை: சி.எம்.டி.ஏ.,வில், உதவியாளர், தட்டச்சர் பணிக்கு நேரடியாக, 131 பேர் தேர்வு செய்யப்பட்டதில், குளறுபடிகள் நடந்ததா என, துறை ரீதியான ஆய்வு நடந்து வருகிறது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக இருந்தன. இவற்றை நேரடி தேர்வு வாயிலாக நிரப்ப, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இதில், 131 இடங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு நடைமுறைகள் பிப்., 24ல் முடிக்கப்பட்டன. அதன்பின், தேர்வான பணியாளர்கள் குறித்தும், அவர்களின் மதிப்பெண் குறித்தும், இடஒதுக்கீடு முறை பற்றியும், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தேர்வான நபர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து, பணி ஆணைகள் வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இதனால், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால், சி.எம்.டி.ஏ.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: பணியாளர்கள் தேர்வு தொடர்பான கோப்புகளை, துறை ரீதியான ஆய்வுக்கு, அதிகாரிகள் உட்படுத்தி உள்ளனர்.

நிர்வாக பிரிவு அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.மேலும், பணியாளர் தேர்வு விஷயத்தில், நிர்வாக பிரிவை வழி நடத்தியவர்கள், முடிவுகள் எடுக்கும் நிலையில் இருந்த அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024