Wednesday, April 28, 2021

கொரோனா விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுங்கள் அலுவலகங்களுக்கு தலைமை செயலர் உத்தரவு

கொரோனா விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுங்கள் அலுவலகங்களுக்கு தலைமை செயலர் உத்தரவு

Added : ஏப் 27, 2021 21:46

சென்னை:'அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், கடிதம் அனுப்பி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

* அலுவலகத்தில் பணிபுரிவோர் இடையே, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்

* அனைவரும்எப்போதும் முக கவசம்அல்லது முக தடுப்பு அணிந்திருக்க வேண்டும்

* அடிக்கடி கைகளை, 40 முதல், 60 வினாடிகள் சோப்பால் கழுவ வேண்டும்

* கிருமி நாசினி பயன்படுத்தினால், குறைந்தது, 20 வினாடிகள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்

*தும்மல், இருமல் வந்தால், டிஷ்யூ பேப்பர், கைகுட்டை பயன்படுத்த வேண்டும். துப்புவது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்

* அனைவரும் தங் கள் மொபைல் போனில், 'ஆரோக்கிய சேது' செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டும், அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின், அனுமதிக்க வேண்டும்

*மதிய உணவின் போதும், ஊழியர்கள் சமூக இடை வெளியை பராமரிக்க வேண்டும்

*'ஏசி' அறையில், 24 டிகிரி முதல், 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும். அறைகள் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்

* பணி செய்யும் இடத்தை, தொடர்ச்சியாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும்

* யாருக்கேனும் நோய் அறிகுறி இருந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று உறுதியானால், அவர்கள் பணிபுரிந்த அறை முழுவதையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்

* தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்

* அலுவலகத்தில் பணி புரிவோர்; தடுப்பூசி போட தகுதியானோர்; முதல் டோஸ், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் விபரத்தை, வரும், 30ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் வாரந்தோறும், தடுப்பூசி போட்டவர்கள் குறித்த விபரத்தை அனுப்ப வேண்டும்.இவ்வாறு ராஜிவ் ரஞ்சன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024