Wednesday, April 28, 2021

ரயில் புறப்படும் இடம் மாற்றம்

ரயில் புறப்படும் இடம் மாற்றம்

Added : ஏப் 27, 2021 20:24

சென்னை:சென்னை, எழும்பூர் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணி நடப்பதால், நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

* சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, மே, 6, 13, 20, 27, ஜூன், 3; 10ம் தேதிகளில், மாலை, 6:55 மணிக்கு இயக்கப்பட வேண்டிய வாராந்திர சிறப்பு ரயில், எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

* நாகர்கோவிலில் இருந்து, 30, மே, 7, 14, 21, 28, ஜூன், 4 மற்றும், 11 ம் தேதிகளில், மாலை, 4:15க்கு இயக்கப்படும் ரயில், தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரம் - எழும்பூர் இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024