ஸ்டார் ஓட்டல் அறைகள் நீதிமன்றம் அதிருப்தி
Added : ஏப் 27, 2021 22:41
புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற, ஐந்து நட்சத்திர ஓட்டலில், 100 அறைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டதற்கு, உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
'டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அவர்களின் சிகிச்சைக்காக, ஐந்து நட்சத்திர ஓட்டலான, டில்லி அசோகா ஓட்டலில், 100 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன' என, சாணக்கியபுரி துணை கலெக்டர் கீதா குரோவர், அறிவித்தார்
இது குறித்து, டில்லி உயர் நீதிமன்றம் கூறியதாவது:நீதிபதிகள், நீதிமன்ற அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு மருத்துவ மனையில் அனுமதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தான், நீதிமன்றம் தெரிவித்தது. அசோகா ஓட்டலில், 100 அறைகளை ஒதுக்கும்படி, உங்களிடம் யார் கேட்டது?
இது போன்ற சர்ச்சைகளை ஏன் உருவாக்குகிறீர்கள். ஒரு பிரிவினருக்கு மட்டும், இப்படிப்பட்ட வசதிகளை எப்படி வழங்கலாம்?இந்த விவகாரத்தில், டில்லி அரசு பிறப்பித்த உத்தரவு முற்றிலும் தவறானது. இது தொடர்பாக, டில்லி அரசு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்தது.
No comments:
Post a Comment