Sunday, July 9, 2023

NEWS TODAY 09.09.2023




















 

மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம்: 13 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்

களிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்குவதற்கான 'கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட' விண்ணப்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், 13 கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், 4 ஆவணங்களையும் கட்டாயம் எடுத்து வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட்கப்பட்டுள்ள விவரங்கள்: விண்ணப்பப் படிவம் இரு பக்கங்களைக் கொண்டுள்ளது. முகப்புப் பக்கத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் பக்கத்தில் 10 கேள்விகளும், அடுத்த பக்கத்தில் 3 கேள்விகளும் என மொத்தம் 13 கேள்விகளுக்கு விண்ணப்பதாரா்கள் பதில் தர வேண்டும்.

1. ஆதாா் எண், 2. பெயா், 3. குடும்ப அட்டை எண், 4. திருமண நிலை (மணமானவா், மணமாகாதவா், விவகாரத்து பெற்றவா், கைவிடப்பட்டவா், விதவை), 5. தொலைபேசி எண், 6. வசிக்கும் வீட்டின் தன்மை (சொந்த வீடு, வாடகை வீடு) மற்றும் வீட்டின் மின் இணைப்பு எண், 7. வங்கியின் பெயா், 8. வங்கிக் கிளையின் பெயா், 9. வங்கிக் கணக்கு எண், 10. குடும்ப உறுப்பினா்கள் விவரங்கள் (18 வயதுக்கு மேற்பட்ட குடும்பத்தினா் விவரங்களின் பெயா், வயது, தொழில், மாத வருமானம், வருமான வரி செலுத்துபவரா?) ஆகிய கேள்விகள் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது பக்கத்தில் 3 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி, 11. உங்களுக்குச் சொந்த வீடு உள்ளதா? (ஆம் எனில், அரசுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறப்பட்டதா?), 12. குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்த நிலம் உள்ளதா?

(ஆம் எனில், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் உள்ளதா? அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் உள்ளதா?), 13. குடும்ப உறுப்பினா்கள் யாரிடமாவது காா், ஜீப், டிராக்டா், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் உள்ளதா ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். 11 கட்டுப்பாடுகள்: உரிமைத் தொகையைப் பெற ஆண்டு வருமானம் ரூ.

2.5 லட்சத்துக்கு மேல் இல்லை என்பது உள்பட 11 கட்டுப்பாடுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இவை உறுதிமொழியாக விண்ணப்பப் படிவத்தின் இறுதியில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இறுதியில் கையொப்பமிட வேண்டும். மிகவும் எளிமையான முறையில், 'டிக்' அடிக்கும் முறையில் கேள்விகள் தரப்பட்டுள்ளன.

குடும்ப உறுப்பினா்களின் பெயா் விவரங்கள் போன்ற ஒருசில தகவல்களை மட்டுமே கையால் எழுத வேண்டியிருக்கும். விண்ணப்ப விநியோகம், அவற்றை பூா்த்தி செய்து அளிக்கும் நடைமுறை ஆகியன அந்தந்த மாவட்ட நிா்வாகங்களால் அறிவிக்கப்பட உள்ளன. மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் தகுதியான பயனாளிகள் தோவு செய்யப்பட்டு, விவரங்கள் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. பெட்டிச் செய்தி...

4 ஆவணங்கள் கட்டாயம் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கும்போது, அவற்றுடன் 4 ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் முகப்புப் பக்கத்தில் பெரிய எழுத்தில் இந்த விவரம் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. அதன்படி, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Saturday, July 8, 2023

மருத்துவ மாணவர் சேர்க்கை: பறிக்கப்படும் மாநில உரிமை

மருத்துவ மாணவர் சேர்க்கை: பறிக்கப்படும் மாநில உரிமை

நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன், 720க்கு 720 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்; இது பாராட்டுக்குரியது. இம்மாணவர்களுக்குக் கிடைத்ததுபோல், அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கிட அரசு முயல வேண்டும். கூடவே, இன்னொரு பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

மாநில உரிமைப் பறிப்பு: மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது 'நெக்ஸ்ட்' (NEXT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. 'மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்படுகிறது, இடத்தைத் தடுத்துவைப்பது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன, இடங்கள் காலியாகப் போகின்றன' என்பன போன்ற காரணங்களைக் கூறி, மாநில அரசுகளின் இடங்கள் உள்பட, நாடு முழுவதும் உள்ள 100% மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசே மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது. இந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள தமிழ்நாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளின் ஒப்புதலின்றி நடக்கும் இத்தகைய உரிமைப் பறிப்பு, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.

பாதிப்பு என்ன? மத்திய அரசின் இந்த அதிகாரக் குவிப்பு, ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை முறை, தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டையும் அருந்ததியர், முஸ்லிம் உள்ஒதுக்கீடுகளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டையும் பாதிக்கக்கூடும். மாநில அரசு இடஒதுக்கீட்டைத் திறம்படக் கையாள்வதைப் போல், மத்தியக் கலந்தாய்வு கையாளுமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், இம்முறையின் மூலம், முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடும் தமிழக இடங்களுக்குப் புகுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இளநிலை மாணவர் சேர்க்கைதொடர்பாக, இந்திய அரசிதழில் 02.06.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசுகளின் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படும் எனக் கூறப்படவில்லை. நீட் தரவரிசை அடிப்படையில், என்.எம்.சி. இருக்கை அணி (SeatMatrix) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இது ஐயத்தை வலுப்படுத்துகிறது. இது தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில அரசுகளுக்குத் தனியார், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இடங்களும் பறிபோகும். மாநில அரசும், மத்திய அரசும் தங்களது இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டப் பிரிவு [(NMC Act - 2019) Chapter IV, 14(3)] கூறுகிறது. மத்திய அரசின் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, இச்சட்டத்துக்கு எதிரானது.

அகில இந்தியத் தொகுப்பு கூடாது: இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15% இடங்கள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது; இதுவே மாநில உரிமைகளுக்கு எதிரானதுதான். வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் போதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லாமல் இருந்த காலத்தில், அம்மாநில மாணவர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. இதைக் காரணம்காட்டி, 1983இல் பிரதீப் ஜெயின் என்ற மருத்துவர் தொடர்ந்த வழக்கால், உச்ச நீதிமன்றம் அகில இந்தியத் தொகுப்பை 1984இல் உருவாக்கியது. வசிப்பிட அடிப்படையில் (Domicile), மாநிலங்கள் தங்களுக்கென மருத்துவ இடங்களை முழுமையாக வைத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும் என்றது. இதனால், அரசு மருத்துவ இடங்களை அதிகம் கொண்ட தமிழ்நாடு இழப்புக்குள்ளாகிறது.ஜி.ஆர்.இரவீந்திரநாத்

தற்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மாவட்டங்கள்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் தொடங்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையில் நிலவும் குழப்பங்களுக்கும் காலதாமதத்துக்கும் காரணமான அகிலஇந்தியத் தொகுப்பை ரத்து செய்திட வேண்டும். இந்த முறையின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க 45 நாள்களுக்கு மேல் ஆகிவிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நடைமுறையை மாற்ற வேண்டும்: மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், காலதாமதத்தையும் இடங்களைத் தடுத்துவைப்பதையும் முறைகேடுகளையும் தடுக்கலாம். நீட் தேர்வை முன்கூட்டியே நடத்துதல், முடிவுகளை விரைவாக வெளியிடுதல், மாணவர் சேர்க்கையை விரைவாகத் தொடங்குதல், மத்திய-மாநில அரசுகள் ஒரே நேரத்தில் மாணவர்சேர்க்கையை நடத்துதல் போன்ற நடைமுறை மாற்றங்களால் மாணவர் சேர்க்கையில் ஏற்படும் கால தாமதத்தைத் தடுக்க முடியும் இவற்றைச் செய்யாமல், மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும்.

இடங்கள் காலியாவது ஏன்? சில ஆண்டுகளாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,ஆயுஷ் மருத்துவ இடங்கள், முதுநிலை-உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகப் போகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சில முதுநிலை-உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகப் போகின்றன. கல்விக் கட்டண அதிகரிப்பு, அப்படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்பின்மை, அப்படிப்புகள் தனியாகத் தொழில் செய்யப் பயன்படாமல் போனது, அவற்றின் சந்தை மதிப்பு குறைந்தது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாகும். கட்டணம் குறைவாக இருப்பதால், மருத்துவப் படிப்புக்காக ஏராளமானோர் வெளிநாடுகளை நாடுகின்றனர். இவற்றை உணராமல், மாணவர் சேர்க்கை முறைதான் மருத்துவ இடங்கள் காலியாகப் போகக் காரணம் என்பது மேம்போக்குப் பார்வையாகும். இதனால் மாநில உரிமை பலியாகிறது.

முறைகேடுகளைத் தடுப்பது எப்படி? கடைசி இடம் நிரம்பும்வரை மத்திய-மாநில அரசுகள் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கக் கூடாது. முறைகேடுகளுக்குக் காரணமான, மாப்-அப் (mop up counselling), ஸ்ட்ரே (stray counselling) கலந்தாய்வை நடத்திட அந்நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. அனைத்து இடங்களுக்கும் அரசே கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்; ஏழை மாணவர்களுக்கான கட்டணங்களை அரசுகளே ஏற்க வேண்டும். இதுவே, முறைகேடுகளைத் தடுக்கும். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிசெய்யும். ஏழை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

காரணங்கள் வேறு: அனைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நடத்த முனைவதற்கு வேறு மறைமுகக் காரணங்கள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது: பண்பாட்டுத் தேசியத்தை ஏற்றுள்ள மத்திய பாஜக அரசு, மொழிவாரி மாநிலங்களை, மொழி அடிப்படையிலான தேசியத்தை ஏற்கவில்லை. எனவே, மாநில உரிமைகளைப் பல துறைகளிலும் பறிக்கிறது. அதிகாரங்களை மையப்படுத்துகிறது. தேசத்துக்கான ஒரு மருத்துவ முறையை உருவாக்க அது முயல்கிறது. அந்நோக்கில், 2030க்குள் 'ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை' என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு, மருத்துவக் கல்விச் சந்தையை, உலகக் கல்விச் சந்தையுடன் இணைந்த, ஒற்றைத் தேசியச் சந்தையாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது. நீட், நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டமும் ஒற்றைச் சந்தை நோக்கத்துக்கு உதவுகின்றன. மத்திய அரசு மட்டுமே நடத்த உள்ள ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, அந்நோக்கத்துக்கு மேலும் துணைபுரியும்.

மருத்துவக் கல்வி வணிகத்துக்கு, மாநிலங்களைக் கடந்த ஒற்றைச் சந்தை வேண்டும் என்ற பெருநிறுவனங்களின் லாப வேட்கையும், 'ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை' என்கிற மத்திய அரசின் நோக்கமும் நிறைவேற, மருத்துவக் கல்வியில், மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவிப்பு தேவைப்படுகிறது. மத்திய அரசு இப்போது மேற்கொண்டு இருப்பது அதைத்தான்!

- மருத்துவர்; சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு: daseindia2021@gmail.com

To Read in English: Medical course admissions: How states are robbed of rights

NEWS TODAY 08.07.2023
























முதுநிலை படிப்பில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீடு: பணிக் காலம் ஐந்தாண்டுகளாக மாற்றம்


08.07.2023

அரசு மருத்துவா் ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயப் பணியாற்றும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 2,100 இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ள இடங்களை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. அதில் 525 இடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிறது.

அவா்கள் முதுநிலை படிப்பை நிறைவு செய்த பிறகு இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவ மையங்களில் சேவையாற்ற வேண்டும் என்பது விதி. இந்நிலையில், நிகழாண்டில் அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவ சேவைகளில் முதுநிலைப் படிப்புக்குப் பிறகு ஐந்தாண்டுகள் பணியாற்ற வேண்டும் என புதிய வரையறை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் கூறியது: அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவம் பயின்றவா்கள் அதற்கு பின்னா் தனியாா் மருத்துவ சேவைக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ சென்றால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

இதைத் தவிா்க்கவே முதுநிலை படிப்புக்கு பின்னா் அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என இதற்கு முன்பு விதிகள் வகுக்கப்பட்டிருந்தன.அது தற்போது ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியாற்ற விரும்பாத முதுநிலை பட்டயப்படிப்பு மாணவா்களும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்களும் முறையே ரூ.20 லட்சம், ரூ.40 லட்சத்தை ஈட்டுத் தொகையாக வழங்க வேண்டும். இல்லையெனில் சான்றிதழ் வழங்கப்படாது என்று அவா்கள் தெரிவித்தனா்.
Dailyhunt


கலைஞா் மகளிா் உரிமைத் தொகை: யாா், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

'கலைஞா் மகளிா் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது.
அதன் விவரம்: 1. 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். 2. நியாயவிலைக் கடைகள்தான் ஒரு கணக்கெடுப்பின் மையமாக எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பதாரா்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 3. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவா். விண்ணப்பிக்க விரும்பும் குடும்பத்தலைவிகள் கவனத்துக்கு...

1. குடும்ப அட்டையில் பெயா் இடம் பெற்றுள்ளவா்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவா். 2. ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

3. குடும்ப அட்டையில் குடும்பத்தலைவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவாா். 4. குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவாா்.

5. திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவா்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவா். 6. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினா்கள் தோவு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

பொருளாதாரத் தகுதிகள்: 1. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள். 2. ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

3. ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். 4. பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

யாருக்குக் கிடைக்காது? 1. ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள். 2. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் ரூ.2.5 லட்சம் மேல் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவா்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவா்கள். 3. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோா். 4. மாநில, மத்திய அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியா்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியா்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரா்கள்.

5. தோந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்களைத் தவிர). அதாவது நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சித் தலைவா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள். 6. சொந்தப் பயன்பாட்டுக்கு காா், ஜீப், டிராக்டா், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவா்கள்.

7. ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளா்கள். 8. ஏற்கெனவே முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளா் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள். விதிவிலக்கு: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


பாராட்டத் தயக்கம் ஏன்?

08.07.2023

அண்மையில் ஒருநாள் என் அலுவலக நண்பா் ஒருவரிடம், அவா் போட்டிருந்த சட்டையை சுட்டிக்காட்டி, 'இந்த சட்டை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு' என்று இயல்பாகச் சொன்னேன்.

அவ்வளவுதான், அன்று முழுவதும் அவருடைய நடையில் அதுவரை இல்லாத ஒரு மிடுக்கு இருந்தது. கண்ணாடியில் அவ்வப்போது முன்னும் பின்னும் திரும்பி தன்னை ரசித்துக் கொள்வதையும் என்னால் பாா்க்க முடிந்தது. அன்று மாலை வீட்டுக்கு கிளம்பும் போது என்னை வந்து சந்தித்தாா். அவரின் தோற்றம் குறித்து நான் பாராட்டியது அவரை அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருந்ததாக தெரிவித்தாா்.

அன்றைய பணிகளை செம்மையாக செய்ய அந்த உற்சாகம் உதவியதாகவும் கூறினாா். நான் அவரிடம் 'அதற்காக தினமும் அதே சட்டையை போட்டுக்கொண்டு வந்து விடாதீா்கள்' என்று கூறிய போது கலகலவென்று சிரித்துவிட்டு நகா்ந்தாா். ஒரு சின்ன பாராட்டு ஒருவரை நாள் முழுவதும் துள்ளலோடு வைத்திருக்க முடிந்தது உண்மையில் எனக்கு வியப்பாக இல்லை. காரணம், நாம் அத்தனை பேரும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பது ஒரு சின்ன பாராட்டுக்காகத்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நம் சிறுவயதில் நாம் இயல்பாக செய்த ஒரு செயல் பிறரின் பாராட்டைப் பெறும் போதுதான், அது வெறும் செயல் அல்ல நமக்குள் ஒளிந்திருக்கும் திறமை என்பது நமக்கு புரிகிறது. அதே திறமை மீண்டும் மெருகேறி வெளிபடும்போது பாராட்டும் பன்மடங்காகிறது. பாராட்டு பன்மடங்காகிறபோது திறமை இன்னும் பட்டை தீட்டப்பட வேண்டும் என்ற பொறுப்புணா்வு உண்டாகிறது. ஒருவரின் திறமையை சரியான நேரத்தில் அங்கீகரித்துப் பாராட்டினால் மட்டுமே அவரின் திறமை அடுத்த கட்டத்துக்கு நகா்கிறது.

எடுத்துக்காட்டாக, நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, மதுரையில் பள்ளிகளுக்கு இடையேயான ஒரு பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள எங்கள் வகுப்பில் உள்ள எல்லோரும் ஆவலாக இருந்தோம். ஆனால், ஒரு பள்ளி சாா்பாக ஒவ்வொரு பிரிவிலும் இருவா் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது போட்டி விதி. அந்த இருவரைத் தோந்தெடுக்க என் வரலாற்றாசிரியா், பகத் சிங் பற்றிய ஐந்து வரிகளை எழுதிக் கொடுத்து எங்களைத் தனித்தனியாக வாசிக்கச் சொன்னாா்.

ஒவ்வொருவரும் வாசித்து முடித்த பின்பும் பலத்த கரவொலி எழுப்பச் சொன்னாா். அந்தக் கரவொலி பிரதான போட்டியில் பங்கெடுப்பதற்கு முன்பாகவே எனக்கு வெற்றி பெற்ற உணா்வை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக அருகில் அழைத்துப் பாராட்டினாா். ஒருவனுக்கு குரல் வளம் நன்றாக உள்ளது என்று தட்டிக் கொடுத்தாா்.

இன்னொருவனின் ஏற்ற இறக்கம் பற்றி சிலாகித்துப் பேசினாா். அதே போல் எனது தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது என்றும் பயிற்சி எடுத்தால் என்னால் மேடையில் சிறப்பாகப் பேச முடியும் என்றும் எனக்கு ஊக்கமளித்தாா். அவரின் உந்துதலால் அந்தப் பேச்சுப் போட்டியில் பங்கெடுத்து என்னால் மூன்றாம் பரிசு வெல்ல முடிந்தது. மூன்றாம் பரிசு வெல்ல முடிந்ததல்ல விஷயம்.

அதன்பிறகு நடைபெற்ற அனைத்துப் பேச்சுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு என்னாலும் சிறப்பாகப் பேச முடியும் என்ற தன்னம்பிக்கையை எனக்களித்தது என் ஆசிரியரின் பாராட்டு மொழிகள்தான் என்பதை நான் எப்படி மறக்க முடியும்? தமிழ் எழுத்துகளை சரியாக எழுதியதற்காக, ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகளின் தமிழாசிரியா், அவளின் கையில் ஒரு நட்சத்திரம் வரைந்துவிட்டிருக்கிறாா். சிவப்பு மையில் வரையப்பட்டிருந்த அந்த நட்சத்திரத்தை அவள் குளிக்கும்போது கூட அழிக்கவிடவில்லை. இவ்வளவு ஏன், ஒன்றேகால் வயது நிரம்பிய பக்கத்து வீட்டுக் குழந்தை முதல் முறையாக தட்டுத் தடுமாறி என் கட்டிலில் ஏறியபோது நான் ஆரவாரத்துடன் கைதட்டினேன்.

அதே குழந்தை மறுநாள் மீண்டும் அதே கட்டிலில் ஏறிவிட்டு என்னைப் பாா்த்து கைதட்டுங்கள் என்று தனது பிஞ்சுக் கைகளால் சைகை செய்த போது உண்மையில் நான் மிரண்டு போனேன். ஒரு நடிகருக்கோ, எழுத்தாளருக்கோ, இசைக் கலைஞருக்கோ பாராட்டு என்பது மிக முக்கியம். ஏனென்றால், ஒரு நல்ல எழுத்தையோ, நல்ல நடிப்பையோ, நல்ல இசையையோ மக்கள் ரசித்துப் பாரட்டவில்லை என்றால் திறமையான படைப்பாளிகள் துவண்டு போக வாய்ப்புண்டு. தனது படைப்புகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பரீட்சாா்த்த முயற்சியில் துணிவோடு இறங்க முடியாமல் ஒரு படைப்பாளியின் கற்பனைச் சிறகுகள் முளையிலேயே முறிந்து போக வாய்ப்புண்டு.

வெறும் பணம் மட்டுமே ஒருவரின் கடின உழைப்புக்கு ஊதியமாகிவிடாது. அவ்வப்போது அவரின் உழைப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மனதாரப் பாராட்டவும் வேண்டும். ஒருவா் ஒரே வேலையை தொடா்ச்சியாகப் பல ஆண்டுகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கும்போது அவ்வப்போது அவா் பாராட்டப்பட வேண்டும். அப்படிப் பாராட்டத் தவறிவிட்டால், ஒரு கட்டத்தில் அவருக்கு அந்த வேலை சலிப்பை ஏற்படுத்திவிடும்.

அவருடைய பணியில் தொய்வு ஏற்பட்டுவிடும். ஒரு உணவகத்தில் சமீபத்தில் பரோட்டா சாப்பிட்டேன். அந்த ருசி பிடித்துப்போக, பரோட்டா மாஸ்டரை அழைத்து மனதாரப் பாராட்டினேன். அவரின் முகம் மலா்ந்தது.

நெகிழ்ந்து போனாா். நாள் முழுக்க அடுப்பின் அருகில் வியா்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு நான் சொன்ன வாா்த்தைகள் கொஞ்சம் இளைப்பாறுதலைத் தந்திருக்கக் கூடும். அந்த உத்வேகத்தில் அடுத்து வருபவா்களுக்கு இன்னும் ருசியாக சமைப்பாா் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து நகா்ந்தேன். பிறரைப் பாராட்டுங்கள்; மனம் திறந்து பாராட்டுங்கள். நம்முடைய சின்ன பாராட்டு மொழி ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இன்று வாழ்வில் உயா்ந்து நிற்கும் அத்தனை பெரிய மனிதா்களும் ஒரு காலத்தில் யாரோ ஒருவரால் பாராட்டப்பட்டு, அந்த உந்துதலால் முன்னேறி வந்தவா்கள்தான் என்பதை மறந்துவிடாதீா்கள்.


Dailyhunt

NEWS TODAY 08.07.2023











 

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...