Friday, January 2, 2015

'ஆன் - லைன் விசா'அதிகரிக்கிறது விண்ணப்பம்

புதுடில்லி:இந்திய நகரங்களுக்கு, சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்காக, 'விசா ஆன் அரைவல்' முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், இணையம் மூலம், அந்த விசா கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 22 ஆயிரம் விசாக்கள், இணையம் மூலம் வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு, ஜனவரி முதல் நவம்பர் வரை, 25 ஆயிரம் ஆன் அரைவல் விசாக்கள் வழங்கப்பட்டன. நவ., 27 முதல், ஆன் - லைன் மூலம், விசா ஆன் அரைவலுக்கு விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அனுமதித்தது.அந்த தேதியிலிருந்து, டிச., 31 வரை, 22 ஆயிரம் விசாக்கள், ஆன் - லைன் முறையில் வழங்கப்பட்டு உள்ளன.பொழுதுபோக்கு, மருத்துவ சிகிச்சை, வர்த்தகம் போன்ற பல காரணங்களுக்காக, அதிகபட்சம் 30 நாட்கள், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல, ஆன் - லைன் விசா கோரிவிண்ணப்பிக்கலாம்.

சென்னையிலிருந்து சென்ற முகமதுகான், சிங்கப்பூரில் 8 மணி நேரம் மட்டும் தங்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோவை வந்தார்.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு ‘சில்க் ஏர்லைன்ஸ்’ விமானம் கோவை வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, புதுக்கோட்டையை சேர்ந்த முகமதுகான் (வயது 41) என்பவரின் சூட்கேசில் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி நான்கும், 100 கிராம் கட்டிகள் 10-தும் ஆக மொத்தம் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 26 லட்சம் ஆகும்.

என்ஜினீயரிங் பட்டதாரி

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முகமதுகான் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 5 முறை சென்று சென்னை வழியாக வந்துள்ளார். அப்போது அவர் தங்கம் கடத்தி வந்தாரா? என்று விசாரணை நடக்கிறது.

தற்போது சென்னையிலிருந்து சென்ற முகமதுகான், சிங்கப்பூரில் 8 மணி நேரம் மட்டும் தங்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோவை வந்தார். எனவே அவர் தங்கம் கடத்தி வருவதற்காகவே சிங்கப்பூருக்கு சென்றது தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோவை சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் குமரேஷ் தெரிவித்தார்.

காத்திருக்கும் 4ஜி சூறாவளி



2 ஜியை விட 3 ஜியைப் பெரிய விஷயமாகக் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்குள் 4 ஜி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ஆரம்பமாகிவிட்டன. அநேகமாக எல்லா ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுமே 4 ஜி போன்களுக்கான திட்டத்தை வைத்திருக்கின்றன. மைக்ரோசாப்டின் லூமியா 638 போன் 4 ஜி வசதி கொண்டதாக அறிமுகமாகி உள்ளது.

ஹுவேய் சார்பிலும் 4 ஜி போன்கள் அறிமுகமாக உள்ளன. செல்போன் சேவை நிறுவனங்களும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் கன்சல்டன்சி நிறுவனமான பிடபிள்யுசி ( PwC) அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒன்னரைக் கோடி4 ஜி சந்தாதாரர்கள் இருப்பார்கள் எனக் கணித்துள்ளது. மேலும் இந்தியாவில் வை-பை மையங்களும் அதிகரிக்கும் என இதன் கணிப்பு தெரிவிக்கிறது. இதன் விளைவாகப் போட்டி அதிகரித்து விலை குறைப்பும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 7–ந்தேதி வேலை நிறுத்தம்



நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், 7–ந்தேதி ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

ஸ்டிரைக்

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும், வருகிற 7–ந்தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுபற்றி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அமைப்பாளர் விஸ்வாஸ் உதாகி, மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாங்கள் வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, 23 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வருகிறோம்.

ஆனால், வங்கிகளின் நிர்வாக அமைப்பாள இந்திய வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முன்வருகிறது.

இந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும். அதை வலியுறுத்தி, 7–ந்தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

7–ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு பிறகும், ஊதிய உயர்வு அளிக்கப்படாவிட்டால், 21–ந்தேதி முதல் 24–ந்தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்பிறகு, மார்ச் 16–ந்தேதியில் இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 1½ கோடி சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு நேரடி மானிய திட்டம் அமலுக்கு வந்தது வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.568 5–ந் தேதிக்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்

தமிழகத்தில் 1½ கோடி சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு மானிய தொகையை நேரடியாக வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் 5–ந் தேதிக்குள் தலா 568 ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

நேரடி மானிய திட்டம்

எனவே, சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மானிய தொகையை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் இந்தியா முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, புத்தாண்டு தினமான நேற்று முதல் இந்த திட்டம் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்தது.

1½ கோடி இணைப்புகள்

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் ‘சப்ளை’ செய்து வருகின்றன. இந்த 3 எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப் புகள் உள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘இண்டேன்’ சமையல் கியாசுக்கு அதிகபட்சமாக ஒரு கோடி இணைப்புகள் உள்ளன.

வங்கி கணக்கின் மூலம் நேரடியாக மானியம் பெறும் திட்டத்திற்காக சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றன.

இண்டேன்
வாடிக்கையாளர்கள்

இந்தியன் ஆயில் நிறுவனமும், ‘இண்டேன்’ சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் விவரங்களை சேகரித்து வருகிறது.

இந்த பணியை விரைவுபடுத்துவதற்காக தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய 4 பகுதி அலுவலகங்களின் கீழ் உள்ள பகுதிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு பதிவு முகாம்களை நடத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெற்று வருகிறது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு பொதுமக்களுக்கு உதவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வங்கி கணக்கில் மானியம்

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 1–ந்தேதியான நேற்று முதல் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அளித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்த (‘லிங்’) வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் மானிய முன்பணம் செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலக செய்தித்தொடர்பு முதுநிலை மேலாளர் வி.வெற்றிசெல்வகுமார் கூறியதாவது:–

53 லட்சம் பேர் இணைப்பு

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 54 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் மட்டும் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் கையாளப்பட்டு வருகின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31–ந்தேதி வரை 53 லட்சம் பேர் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 52.83 சதவீதம் பேரும், குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 சதவீதம் பேரும் இணைந்து உள்ளனர். இதில் 38.75 சதவீதம் பேர் ‘ஆதார்’ அட்டை மற்றும் வங்கி கணக்கும், 22.98 சதவீதம் பேர் வங்கி கணக்கு எண்ணை மட்டும் இணைத்து உள்ளனர். மீதம் உள்ள அனைவரையும் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

வருகிற 15–ந்தேதி வரை 4 பகுதி அலுவலகங்களின் கீழ் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். மார்ச், 31–ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதுவரை மானியம் சேர்க்காமல், அதாவது பழைய விலைக்கே வீட்டு உபயோக சிலிண்டர்கள் வினியோகிக்கப்படும். வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மானியம் சேர்க்கப்பட்டு அப்போதைய சர்வதேச சந்தையின் விலை மதிப்பில் வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு

கடைசி தேதி மார்ச்–31 என்று அறிவிக்கப்பட்டு
இருப்பது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணைதளத்தில் இணைவதற்கான தேதி ஆகும். எனவே கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக முகாம்களிலோ அல்லது டீலர்களிடமோ விண்ணப்பங்களை அளித்து மானியத்தை தங்கள் வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லையே என்று இருக்கவேண்டாம், வங்கி கணக்கு இருந்தால் உடனடியாக அதனை முன்பதிவு செய்யலாம்.

‘ஆதார்’ அட்டை இருப்பவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பதிவு செய்ய னீஹ்றீஜீரீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் ‘ஆதார்’ அட்டை எண்ணை பதிவு செய்யலாம். இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சினிமா ஸ்லைடு, துண்டு பிரசுரம், செல்போன் குறுஞ்செய்தி, பெட்ரோல் பங்க் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறது. வங்கிகளும் விரைந்து செயல்படுவதற்காக வங்கி உயர் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

53 லட்சம் பேருக்கு மானியம்

விண்ணப்பங்களை முறையாக செலுத்தி (கடந்த 31–ந்தேதி நிலவரப்படி) இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்த 53 லட்சத்து 42 ஆயிரத்து 260 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரும் 5–ந்தேதிக்குள் தலா ரூ.568 வீதம் முன்பணம் (மானிய தொகை) செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.404.50 விலையிலும், வர்த்தக நிறுவனங்களுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ.1,500 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஜனவரி மாதம் முழுவதும் மானியம் அல்லாத வீடுகளுக்கான 14.2 கிலோ சிலிண்டர் ரூ.729–க்கு விற்பனை செய்யப்படும். இந்த மானிய திட்டம் யாருக்கு போய்ச் சேரவேண்டுமோ, அவர்களுக்கு விரைவாக சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 12 ஆயிரம் பேர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று கோரி மனு அளித்துள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, January 1, 2015

ஆறே வினாடியில் 40ஆயிரம் ஜியோமி ரெட் மீ 4ஜி போன்கள் விற்று சாதனை !

ஏற்கனவே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான் இது! ஆம், இதற்கு முன்பு வெளியான ஜியோமி நோட் தைவானில் ஒரே வினாடிக்குள் 10,000 நோட் ஸ்மார்ட் போன்கள் விற்று சக்கைப்போடு போட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இப்படி வெறித்தனமாய் விற்று தீரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.  ஏன் ஜியோமி நிறுவனம் கூட இதனை  எதிர்பார்த்திருக்காது. 

இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் வெளியாகியது இந்த ஸ்மார்ட் போன். வெளியான 6 வினாடிகளுக்குள் 40,000 மொபைல் விற்று தீர்ந்து போனது.
இதன் விளைவாக ஜியோமி நிறுவன இந்திய தலைவர் மனுகுமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து  சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

ஜியோமியின் அடுத்த விற்பனை  ஜனவரி 6ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 30ஆம் தேதியன்றே தொடங்கிவிட்டது.

இந்த ரெட் மீ நோட் 4ஜி ஏற்கனவே 2லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் முதலில் 40ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயங்குதளம்:

ஆண்டிராய்டு 4.4 ஓஎஸ்

உருவளவை:

154 x 78.7 x 9.5 மிமீ

டிஸ்ப்ளே:

5.5 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய IPS டிஸ்பிளேவை (720x1280) கொண்டுள்ளது. 267ppi பிக்ஸல் அடர்த்திக் கொண்டுள்ளது.

பிராசசர்:

2 ஜிபி ரேம்-வுடன் கூடிய Qualcomm MSM8928 Snapdragon 400 Quad-core 1.6 GHz Cortex-A7 Adreno 305 பிராசசரை கொண்டு இயங்குகிறது.

நினைவகம்:

8 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது. மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது. 64 ஜிபி வரை மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.

கேமரா:

LED பிளாஷ்-வுடன் கூடிய 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும், 5 மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.

பேட்டரி:

இதன் பேட்டரி 3,100mAh திறன் கொண்டது. தொடர்ந்து பயன்படுத்தினால்  2ஜி-யில் 38 மணி நேரம் வரையும்,
3ஜி-யில் 14மணி நேரம் வரையும் பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 775மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

சிம்:

இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். ஆனால் மைக்ரோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நிறம்:

கருப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் இந்தப் போன் வெளி வருகிறது.

இணைப்பு:

நெட்வொர்க்
இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும்
ஜி.பி.எஸ். ஆகிய தொழில்
நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
4ஜி LTE இணைப்பில் 150 எம்பிபிஸ் வரை டவுன்லோட்
வசதி மற்றும் 50 எம்பிபிஸ் வரை அப்லோட் ஆகும்.

தனிச் சிறப்புகள்:

4ஜி LTE தொழில்நுட்பம் மிக குறைந்த விலை

குறைகள்:

கஸ்டமர் சப்போர்ட் குறைவு. ஆண்டிராய்டு ஓஎஸ் லாலிபாப் இதில் இல்லை.

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ₹8,999 ரூபாய் .

ஜி.கே.தினேஷ்.,
மாணவப் பத்திரிகையாளர் 

HAPPY NEW YEAR WISHES 2015

NEWS TODAY 2.5.2024