Friday, January 2, 2015

சென்னையிலிருந்து சென்ற முகமதுகான், சிங்கப்பூரில் 8 மணி நேரம் மட்டும் தங்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோவை வந்தார்.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு ‘சில்க் ஏர்லைன்ஸ்’ விமானம் கோவை வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, புதுக்கோட்டையை சேர்ந்த முகமதுகான் (வயது 41) என்பவரின் சூட்கேசில் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி நான்கும், 100 கிராம் கட்டிகள் 10-தும் ஆக மொத்தம் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 26 லட்சம் ஆகும்.

என்ஜினீயரிங் பட்டதாரி

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முகமதுகான் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 5 முறை சென்று சென்னை வழியாக வந்துள்ளார். அப்போது அவர் தங்கம் கடத்தி வந்தாரா? என்று விசாரணை நடக்கிறது.

தற்போது சென்னையிலிருந்து சென்ற முகமதுகான், சிங்கப்பூரில் 8 மணி நேரம் மட்டும் தங்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோவை வந்தார். எனவே அவர் தங்கம் கடத்தி வருவதற்காகவே சிங்கப்பூருக்கு சென்றது தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோவை சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் குமரேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024