நம் இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டத்துடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தேசப்பற்றினை பல்வேறு வகையில் செலுத்தி நாட்டின் விழுமியங்களை காத்துகொண்டிருக்கிறான்.
குடியரசு தின விழாவின் முக்கிய நிகழ்வாக இந்த வருடம் ஒபாமா அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய கோபுரங்களுள் ஒன்றாகவும் மிகவும் புராதன கோவிலாகவும் விளங்கும் மனுநீதி சோழன் ஆண்ட திருவாரூர் தியாகராஜ சுவாமி பெரிய கோவிலில் காலை 6 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
ஒவ்வொரு கோவிலும் நம் சுதந்திர குடியரசு தின நாட்களில் தேசியக் கொடி ஏற்றப்படவேண்டும் என சட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிர்வாகம், கோவில் தன்மை போன்ற பல காரணங்களால் இவை நிறைவேற்றப்படுவதில்லை.
திருவாரூர் கோவிலில் வருடா வருடம் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுவருவது மக்களிடையே அதிகம் பேசப்படும் சிறப்புக்குரியது.
இன்று காலை தேசிய கொடியை ஏற்றிய கோவில் ஊழியர் சுனிந்தர் அவர்களிடம் கெட்கும் பொது “ கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நான் இந்த பணியை செய்து வருகிறேன். தனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்”. நாட்டு எல்லையில் நின்று தேசத்தை பாதுகாக்கும் வீரர்களின் தேசபக்தி நம் எல்லோர் மனதிலும் விதைபட்டால் மகிழ்வே. எல்லார்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
தமிழ்பரதன்
மாணவ பத்திரிக்கையாளர்
No comments:
Post a Comment