Wednesday, January 28, 2015

நயன்தாரா மது வாங்கும் காட்சி: 'நானும் ரவுடிதான்' படத்துக்கு சிக்கல்

Return to frontpage

நயன்தாரா | கோப்புப் படம்: பிவி சிவகுமார்

நடிகை நயன்தாரா மதுபானக் கடையில் மது வாங்கும் காட்சி இடம்பெற்றுள்ள 'நானும் ரவுடிதான்' படத்துக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் படம் 'நானும் ரவுடிதான்'. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது.

நயன்தாரா பீர் வாங்குவது போல வரும் காட்சி 'நானும் ரவுடி தான்' படத்துக்கு படமாக்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பில் இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த வீடியோ காட்சி குறித்து இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில், நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்துப் போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.

எனவே, பெண்களை குடிக்கத் தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்கக் கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024