Tuesday, January 20, 2015

டுவிட்டர் வழியாக பணம் அனுப்பலாம்: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வசதி அறிமுகம்


சமூ வலைத்தளமான 'டுவிட்டர்' வழியாக பணம் அனுப்பும் வசதியை முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பண்ட் டிரான்ஸ்பர் மட்டுமின்றி பிரீபெய்டு மொபைல் ரீசார்ஜ்கள், அக்கவுண்டில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வசதிகளையும் டுவிட்டரில் வழங்குகிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி.

இதற்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியின் டுவிட்டர் பக்கத்திற்கு சென்று இந்த புதிய வசதியை பதிவு செய்து அதில் சந்தாதாரராக இணைய வேண்டும்.

குறிப்பாக, பண்டு டிரான்ஸ்பர் செய்ய பணத்தை அனுப்பும் வாடிக்கையாளர் யாருக்கு அனுப்புகிறாரோ அவரின் டுவிட்டர் முகவரியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பணத்தை அவரது டுவிட்டர் முகவரிக்கு டிரான்ஸ்பர் செய்தவுடன் யூனிக் கோடுடன் (பிரத்யேக அடையாள குறியீடு) எஸ்.எம்.எஸ். வரும். அந்த அடையாள எண்ணை பணத்தை பெறுபவர் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் வெப் பேஜில் டைப் செய்ய வேண்டும். பிறகு அந்த திரை டிரான்ஸாக்சனை முழுமையாக பூர்த்தி செய்ய வழிகாட்டும்.

டுவிட்டர் மூலமாக பணத்தை அனுப்புவது பாதுகாப்பாக இருக்குமா? என்ற சந்தேகத்திற்கும் விடை வைத்திருக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. இரண்டு முறை பாதுகாப்பை உறுதி செய்யும் Two-factor authentication வெப்பேஜில் உள்ளதால் பயப்பட தேவையில்லை என்பதே அந்த விடை.

தற்போது, பணப் பரிமாற்றங்களுக்கு NEFT (National Electronic Funds Transfer) அல்லது RTGS (Real Time Gross Settlement) டிரான்ஸ்பர் முறையை பயன்படுத்தி வரும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி விரைவில் IMPS (Immediate Payment Service) முறையையும் கையாள உள்ளது.

டுவிட்டரில் பணம் அனுப்புவதற்கு வங்கியிலிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், NEFT மற்றும் RTGS பரிவர்த்தனை விதிமுறைகளின் படி அதற்கேற்ற கட்டணத்தை செலுத்துவது கட்டாயமாகும். ஐ.சி.ஐ.சி.ஐ தவிர மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் டுவிட்டர் வழியாக பணத்தை பெற அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் IFSC கோடை பதிவு செய்ய வேண்டும்.

இந்த தகவலை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ராஜிவ் சபர்வால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024