Thursday, January 1, 2015

ஆறே வினாடியில் 40ஆயிரம் ஜியோமி ரெட் மீ 4ஜி போன்கள் விற்று சாதனை !

ஏற்கனவே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான் இது! ஆம், இதற்கு முன்பு வெளியான ஜியோமி நோட் தைவானில் ஒரே வினாடிக்குள் 10,000 நோட் ஸ்மார்ட் போன்கள் விற்று சக்கைப்போடு போட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இப்படி வெறித்தனமாய் விற்று தீரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.  ஏன் ஜியோமி நிறுவனம் கூட இதனை  எதிர்பார்த்திருக்காது. 

இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் வெளியாகியது இந்த ஸ்மார்ட் போன். வெளியான 6 வினாடிகளுக்குள் 40,000 மொபைல் விற்று தீர்ந்து போனது.
இதன் விளைவாக ஜியோமி நிறுவன இந்திய தலைவர் மனுகுமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து  சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

ஜியோமியின் அடுத்த விற்பனை  ஜனவரி 6ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 30ஆம் தேதியன்றே தொடங்கிவிட்டது.

இந்த ரெட் மீ நோட் 4ஜி ஏற்கனவே 2லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் முதலில் 40ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயங்குதளம்:

ஆண்டிராய்டு 4.4 ஓஎஸ்

உருவளவை:

154 x 78.7 x 9.5 மிமீ

டிஸ்ப்ளே:

5.5 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய IPS டிஸ்பிளேவை (720x1280) கொண்டுள்ளது. 267ppi பிக்ஸல் அடர்த்திக் கொண்டுள்ளது.

பிராசசர்:

2 ஜிபி ரேம்-வுடன் கூடிய Qualcomm MSM8928 Snapdragon 400 Quad-core 1.6 GHz Cortex-A7 Adreno 305 பிராசசரை கொண்டு இயங்குகிறது.

நினைவகம்:

8 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது. மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது. 64 ஜிபி வரை மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.

கேமரா:

LED பிளாஷ்-வுடன் கூடிய 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும், 5 மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.

பேட்டரி:

இதன் பேட்டரி 3,100mAh திறன் கொண்டது. தொடர்ந்து பயன்படுத்தினால்  2ஜி-யில் 38 மணி நேரம் வரையும்,
3ஜி-யில் 14மணி நேரம் வரையும் பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 775மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

சிம்:

இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். ஆனால் மைக்ரோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நிறம்:

கருப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் இந்தப் போன் வெளி வருகிறது.

இணைப்பு:

நெட்வொர்க்
இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும்
ஜி.பி.எஸ். ஆகிய தொழில்
நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
4ஜி LTE இணைப்பில் 150 எம்பிபிஸ் வரை டவுன்லோட்
வசதி மற்றும் 50 எம்பிபிஸ் வரை அப்லோட் ஆகும்.

தனிச் சிறப்புகள்:

4ஜி LTE தொழில்நுட்பம் மிக குறைந்த விலை

குறைகள்:

கஸ்டமர் சப்போர்ட் குறைவு. ஆண்டிராய்டு ஓஎஸ் லாலிபாப் இதில் இல்லை.

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ₹8,999 ரூபாய் .

ஜி.கே.தினேஷ்.,
மாணவப் பத்திரிகையாளர் 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024