நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், 7–ந்தேதி ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.
ஸ்டிரைக்
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும், வருகிற 7–ந்தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுபற்றி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அமைப்பாளர் விஸ்வாஸ் உதாகி, மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாங்கள் வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, 23 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வருகிறோம்.
ஆனால், வங்கிகளின் நிர்வாக அமைப்பாள இந்திய வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முன்வருகிறது.
இந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும். அதை வலியுறுத்தி, 7–ந்தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
7–ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு பிறகும், ஊதிய உயர்வு அளிக்கப்படாவிட்டால், 21–ந்தேதி முதல் 24–ந்தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதன்பிறகு, மார்ச் 16–ந்தேதியில் இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment